பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

67

நூற்றாண்டை சார்ந்த ஒரு கிரேக்க நாடகத்தில் பழைய கன்னட மொழியிலமைந்துள்ள சில வாக்கியங்கள் தென்பட்டுள்ளன. சமணர்களது செல்வாக்கினால் சமஸ்கிருதம் கன்னட மொழியோடு கலந்தது கி பி ஐந்தாம் நூற்றாண்டு முதல், பழைய கன்னடத்தில் அமைந்துள்ள கல்வெட்டுக்களைக் காணலாம் நாள்செல்லச் செல்ல சமஸ்கிருதக் கலப்பு மிகுதியாகக் காணப்பட்டுள்ளதாயினும், கன்னட மொழியின் அடிப்படை அமைப்பு, திராவிட மொழிகளை ஒட்டியது தானென்பதற்கு ஐயமில்லை கன்னட எழுத்து வடிவம் கிரந்த எழுத்தைப்போல அமைந்துள்ளது மேலும் கன்னடத்தின் இலக்கண அமைப்பும் தமிழின் இலக்கண அமைப்பை ஒத்திருக்கின்றன

தெலுங்கு :

முதன் முதலில் தமிழிலிருந்து பிரிந்து தனியாக அமைந்தது தெலுங்கு மொழியே பெளத்தரும் சமணரும் தக்காணத்தில் செல்வாக்குப் பெற்றது முதல் பிராகிருதம் பழைய தமிழோடு மிகுதியாகக் கலந்தது தெலுங்கெனும்தனி மொழி பிறந்தது பிற்காலத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு மிகுதியாகக் கலந்தது கி பி 5-7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுக்கள் சில தெலுங்கு மொழி தனி இயல்படைந்துவிட்டதெனத் தெரிவிக்கின்றன. ஆயினும் தெலுங்கு திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதே கி பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த குமாரிலபட்டர் தெலுங்கு மொழியைத் 'திராவிட பாஷா' எனவே குறுப்பிட்டுள்ளார் தெலுங்கு மொழிக்கும் கன்னடத்திற்கும் பல முறையில் ஒற்றுமை காணப் பட்டுளது ஆனால் தமிழோடும் சமஸ்கிருதத்தோடும் தெலுங்கு மிகத் தொடர்பு பெற்றுளது கி பி ஆறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ள 'ஜனாஸ்ரபிரந்தஸ்' என்பது தெலுங்கு அணி இலக்கண முதல் நூல் அதில் தெலுங்கு மொழியின் பல சொல் வழக்குகள் கையாளப் பட்டிருந்த