பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

செந்தமிழ் பெட்டகம்

வகையாலும் குறிப்பிட்ட சில மொழிகள் வேறு தொகுதியின் மொழிகளோடு ஒத்துள்ளனவா என்றும் ஆராய்தல் வேண்டும் இத்தகைய ஆராய்ச்சிகளைத் திராவிட மொழிகளைப்பற்றி நிகழ்த்தினால், இவை உலகில் உள்ளனவாக அறியப் படும் வேறு குடும்ப மொழிகளோடு இணைக்கத் தக்கவை அல்ல என்பது வெளியாகும்

திராவிட மொழிகளின் சிறந்த பொதுப் பண்புகளாக அமைந்திருப்பவற்றுள் சில குறிப்பிடத்தக்கவை 1 திணை இரண்டாகவும், பால் ஐந்தாகவும், அறிவுக்கு ஒக்கும் வகையில் பகுக்கப்பட்டிருக்கின்றன. சில மொழிகளில் கற்பனை காரணமாகப் பால் வேறுபாடு அமைக்கப்பட்டிருப்பதைப் போலத் திராவிட மொழிகளில் பால் வேறுபாடு அமைக்கப்படவில்லை (திராவிடத்தில், மக்கட்சுட்டு-உயர்திணை, அவர் அல்லாத பிற அஃறிணை கல் என்பது எப்பொழுதும் அஃறிணை மனைவி என்னும் சொல் எப்போதும் பெண்பால் வேறு மொழியில், சிலா-பெண்பால்; களத்ரம்-அலிப்பால், தாரா-ஆண்பால்) 2 பெயர்ச் சொற்களில் ஒருமை, பன்மை என்ற எண் வேறுபாடு உண்டேயொழிய ஒருமை, இருமை, பன்மை என்ற வழக்கு இல்லை 3 பெயர்ச் சொற்களுக்கு வேற்றுமை உருபுகள் ஈற்றில்தான் சேர்க்கப்படும்; அவ்வுருபுகள் ஒருமை பன்மை ஆகிய எண்களுக்கு ஒத்த ஒரேவித மான உரு ஆகிய மாறுதலைப்போலத் திராவிட மொழிகளில் மாறுதல் இல்லை 4 வேறு சில மொழிகளிற் பெயரடைச் சொற்களுக்கு வேற்றுமை உருபுகள் ஏற்றுதலைப் போலத் திராவிட மொழிகளில் ஏற்றுதல் வழக்கம் இல்லை 5 ஈற்றில் மெய்யெழுத்தில் முடியும் சொற்களுக்குப் பின் எளிமை காரணமாக ஓர் உயிரொலியைக் கூட்டுவது பெரு வழக்கமாக இருக்கிறது 6 அஃறிணைப் பெயர்களுள் சில ஒருமைப் பொருளிலும் பன்மைப் பொருளிலும் வழங்குதல் உண்டு 7 வந்த இருந்த என்ற பெயரெச்சங்களொடு அவன் என்னும் இடப்பெயர்ச்