பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

73

சொல்லைச் சேர்த்து வந்தவன் இருந்தவன் போன்ற வினைலணையும் பெயர்களை அமைக்கும் ஆற்றல் இம்மொழிகளுக்குண்டு

இவ்வாறு அமைந்துள்ள சில பொதுப் பண்புகள் காரணமாகவும், பெருவாரியாகக் காணப்படுகிற ஒத்த சொற்பொருள் காரணமாகவும் இம்மொழிகளைத் திராவிட மொழிகள் என ஓர் இனமாகக் கொண்டு வழங்குவது பொருத்தமுடையதாகவே இருந்து வருகிறது.

ஒலி வகையில் அகர ஆகாரம், இகர ஈகாரம், உகர ஊகாரம், எகர ஏகாரம், ஐகாரம், ஒகர ஒகாரம், ஒளகாரம் ஆகிய உயிரொலிகள் இம்மொழிகளிற் பொதுவாக உண்டு வடமொழியிலும், வடமொழியின் அடியாகப் பிறந்த மொழிகளிலும் எகரம், ஒகரம் ஆகிய குற்றெழுத்துக்களுக்குத் தனி எழுத்துக்கள் இல்லாமல் இருப்பனவும், திராவிட மொழிகளில் இவற்றிற்கான தனி எழுத்துக்கள் இருத்தல் ஒரு தனிச் சிறப்பு

மெய்யொலிகளில் க வரிசையில் நான்கு எழுத்தும், ச வரிசையில் நான்கு எழுத்தும், ட, த, ப வசைகளில் நன்னான்கு எழுத்தும் வடமொழியில் இருத்தலைப் போலத் தமிழில் இல்லை தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் இந்த வரிசையில் நன்னான்கு எழுத்துக்கள் இந்தாலும், அவை ஒலி வேறுபாடுகளே யொழிய ஒலிய வேறு பாடுகள் இல்லை இம்மொழிகளில் லகர ளகரங்கள் ஒலிய வேறுபாடு உடையன ழகரமும் ளகரமும் தமிழ், மலையாளம், பழங்கன்னடம், பழந்தெலுங்கு ஆகிய மொழிகளுக்குச் சிறப்பாக அமைந்த எழுத்துக்கள் இம்மொழிகள் தம்முள்ளே சொற்களின் ஈற்று ஆகாரம் ஐகாரம் ஆகவோ ஏகாரமாகவோ திரிதல் உண்டு (த தலை; ம தல; தெ தல; க தலெ) ஈற்றில் சில இடங்களில் உகரத்தைச்