பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

செந்தமிழ் பெட்டகம்

திராவிடமொழிகளில் ஒரு தெடர்பம் வேற்றுமை உருபாகமாத்திரம் நிற்கிறது முதல் வேற்றுமையில் வரும் பெயர்ச்சொற்களில் மாறுதல் இல்லை இரண்டாம் வேற்றுமையில் உருபாகப் பொதுவில் ஐ ஏ அம், அது ஆகியவை காணப்படுகின்றன. இவையெல்லாம் ஏதாவது ஒன்றினின்று கிளைத்தவையேயாகும் மூன்றாம் வேற்றுமை உருபாகப் பொதுவில் ஐ ஏ, அம், அது ஆகியவை காணப்படுகின்றன. இவையெல்லாம் ஏதாவது ஒன்றினின்று கிளைத்தவையேயாகும் மூன்றாம் வேற்றுமை உருபாக ஆன் (அல்லது ஆல், இன் அல்லது இம் காணப்படுகிறது உடனிகழ்ச்சிப் பொருளில் ஓடு அல்லது ஒடு பெருவழக்கில் உள்ளது நான்காம் வேற்றுமைஉருபு கு அல்லது கெ ஐந்தன் உருபு இன் அல்லது இம் ஆறன் உருபு அது அல்லது அத அல்லது உடைய அல்லது உடே ஏழன் உருபு இன், இல், கண், உள், ஒள் ஆகியவற்றுள் ஒன்று எட்டாம் வேற்றுமைக்காகப் பெயர்ச்சொற்களின் ஈற்றில் ஏகாரத்தைக் கூட்டி வழங்குவது பெருவழக்கு

எண்ணுப் பெயர்கள் அஃறிணை எண் வாய்பாட்டி லிருந்து கிளைத்தன என்பது நம்பப்படுகின்றது ஓர், இர், மூ, நால், ஐ, அறு, எழ், எண் ஆகிய பெயரடைச் சொற்கள் வடிவத்திலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று போன்ற வடிவங்கள் தமிழிலும், ஒண்ணு, ரெண்டு, மூந்து போன்றன மலையாளத்திலும், ஒகட்டி, ரெண்டு, மூடு போன்றன தெலுங்கிலும் ஒந்து, எரடு, மூரு போன்றன கன்னட மொழியிலும், ஒஞ்சி, ரட்டி, மூஜி போன்றன துளுவிலும், ஒரத், இரத், மூசித் போன்றன பிராஹுயி மொழியிலும், ஒகுத், இரடு, மூது போன்றன பார்ஜி மொழியிலும் காணப்படுகின்றன

தன்மை ஒருமை இடப்பெயராகத் தோன்றித் திராவிட மொழிகளில் அமைந்து வந்த வடிவம் ஆன் அல்லது யான் அல்லது யேன் என மதிக்கப்படுகிறது. இது சமஸ்கிருத அஹம் அல்லது அஸ்மத் என்பதோடு