பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

செந்தமிழ் பெட்டகம்

சொற்கள் நிற்கும் முறை எழுவாய், செயற்படுபொருள், பயனிலை என்ற வரிசையாகும்

இவை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தினின்று கிடைக்கக்கூடிய சுருக்கமான செய்திகளாகும் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்பது முதன் முதலில் டாக்டர் ஆர் கால்டுவெல் என்பவரால் 1856ஆம் ஆண்டில் புத்தகவடிவில் எழுதப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது அதற்கு முன்னால் வாழ்ந்த டேனிஷ் அறிஞர் ராஸ்மஸ் ராஸ்க் (1787-1832) என்பவர் ஆரிய மொழிகளையும், பின்னோ-ஊக்ரிக் மொழிகளையும், திராவிட மொழிகளையும் வகைப்படுத்திக் காட்டினார் எனினும், கால்டுவெல் சிறப்புற ஒப்பிலக்கணம் வழங்கியதைப்போல் அவர் செய்தார் அல்லர்

மேனாட்டில் ஒப்பிலக்கணங்கள் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் பாப் என்பவர்க்கு உண்டாக, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு அவர் ஓர் ஒப்பிலக்கணம் வகுத்துத் தந்தார் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் ஒரோவொரு வேளையில் பல்வேறு மொழிகளைப்பற்றிய சொல் அட்டவணைகளைத் தொகுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது அன்றி, கூரிய நுணங்கியல் முறையில் ஒப்பிலக்கணங்கள் எழுதப்படவில்லை 1791-இல் பாலஸ் என்பாரும், 1817-இல் அதிலுங் என்பாரும் சிற்சில சொல் அட்டவணைகள் பல மொழிகளிலிருந்து திரட்டிச் செப்பனிட்டார்கள் என்றாலும், அவற்றை ஒப்பிலக்கணம் எனச் சொல்லுதல் இயலாது பின்னைய நூற்றாண்டில் ஒப்பிலக்கணம் செய்யப்படுதற்கு அவை அடிப்படையாக அமைந்த ஒப்பியல் அகராதிகள் என்று மாத்திரம் கொள்ளுதல் தகும் 1796-இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற பேரறிஞர் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகியவை ஏதோ ஒரு மூல மொழியிலிருந்து தோன்றியவை என்ற கருத்தினை வெளியிட்டார் அந் நாள் தொட்டு ஒப்பிலக்கணத்திற்கு ஒரு புது விதை விதைக்கப்-