பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மொழியும்
ஓசையும்

வீடு முதலியவை அமைத்து வாழும் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மொழி தோன்றியது அப்போதே கருத்தை உணர்த்துவதற்கு ஒரு நல்ல கருவியாகப் பேச்சுமொழி பயன்பட்டு வந்தது அந்தப் பேச்சு மொழியில் சொற்கள் இருந்தன சொற்களுக்குப் பொருள்கள் இருந்தன. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வோர் ஒலிவடிவம் பெற்று அந்தந்தப் பொருளை உணர்த்திவந்தன. அந்தச் சொற்கள் எவ்வாறு அமைந்தன, அவற்றிற்கு அந்தப் பொருள்கள் எவ்வாறு அமைந்தன என்று பிற்காலத்தார் ஆராயத்தொடங்கினார்கள் அவ்வாறு சொற்களின் தோற்றத்தை அல்லது வருகையை ஆராயும் மொழியியற் பகுதிக்குச் சொல்லியல் என்று பெயர்

ஒவ்வொரு மணிக்கும் ஒவ்வொருவகை ஓசை அமைந்திருப்பதுபோல், ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான ஒலிக்குறிப்பு உண்டு என்றும், அதுவே அந்தப்பொருளை உணர்த்தும்சொல்லாக அமைந்தது என்றும் சிலர் கருதினார்கள் அது உண்மை அன்று என்பது ஆராய்ச்சியால் தெளிவாயிற்று

பொருளுக்கு அறிகுறியாக அமைவதே சொல் அது பொருளை விளக்காது, பொருளின்தன்மையைக் காட்டாது, பொருளை உணர்த்தும் அவ்வளவில் நிற்கும் ஒரு மூட்டையினுள் ஓர் அடையாளம் இட்டால், அந்த