பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

81

மூட்டையினுள் இருக்கும் பொருளுக்கும், அந்த அடையாளத்துக்கும் தொடர்புண்டு என்று கூற முடியாது சில வேளைகளில் உள்ளே இருக்கும் பொருளின் வடிவத்தையே மூட்டையின்மேல் அடையாளமாக எழுதுவதும் உண்டு; ஆனால் அதுவே வழக்கம் என்று கூற முடியாது அதுபோல், ஒருசில சொற்களில் மட்டும் பொருளின் தன்மை ஏதேனும் புலப்படக்கூடும்; ஆயினும், அந்தச் சொற்களும் பொருள்களின் அறிகுறிகளாக நிற்பவையே கா கா என்ற ஒலியால் காக்கை என்று ஒருவகைப் பறவைக்குப் பெயர் அமைந்தது போல், சில சொற்கள் அமைந்திருக்கலாம் ஆனால் அப்படிப்பட்ட சொற்கள் மிகச்சிலவே

பேச்சு மொழி சிலகாலம் சைகை மொழியுடன் ஒன்றாக இருந்து, மெல்ல மெல்லப் பிரிந்து வளர்ந்தது; ஆகையால் இன்னும் சைகை மொழித்தன்மை சில சொற்களில் உள்ளது சுட்டுப் பெயர்களை ஆராய்ந்தால், அவற்றின் ஒலியில் சைகையின் தன்மை அமைந்திருக்கக் காணலாம் அண்மையில் உள்ள பொருள்களைச் சுட்டும்போது கை நீளாது சிறிது குறுகுவது போலவே, அண்மைச் சுட்டுப் பெயர்களில் நா நீளாமல் சிறிது குறுகி நிற்கும் ஒலியாகிய இகரம் அமைந்துள்ளது (இது, இங்கு, இப்படி ஆங்கிலத்தில் திஸ் என்பதில் இகரம் இருத்தல் காணலாம்) சேய்மையைச் சுட்டும்போது கை நீளுவது போலவே, சேய்மைச் சுட்டுக்களில் நா நீளும் அகரம் உள்ளது (அது, அங்கு, ஆங்கு ஆங்கிலத்தில் தேட் என்பதில் அகரம் இருத்தல் காணலாம்) மிகச் சிறியவற்றைக் குறிக்கும் சொற்களில் நாக் குறுகும் ஒலியாகிய இகரம் இருத்தல் கருதத்தக்கது (இம்மி, இடுக்கு, சிறிது; ஆங்கிலத்தில் லிட்டில் என்பதில் இகரம் காணலாம்) இவ்வாறு ஒரு வகைப் பொருளுணர்ச்சி அமைந்திருப்பதாக அறியக் கூடிய சொற்கள் மிகச்சிலவே

செ பெ- 6

செ.பெ-6