பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

செந்தமிழ் பெட்டகம்

சொல்லின் பிறப்புக்கு உரிய காரணத்தை இவ்வாறு ஆராய்ந்து காணும்போது, காரணம் தெரியாதவை மிகப் பலவாக உள்ளன. காரணம் தெரிந்தவைகளாக உள்ள சில சொற்களிலும், அந்தக் காரணம் முற்றிலும் பொருந்தும் காரணமாக இருப்பதில்லை பொருளின் ஒரு பகுதியை அந்தக் காரணம் உணர்த்த முடிகிறதே தவிர, முழுமையும் உணர்த்த முடிவதில்லை எடுத்துக் காட்டாக. நாய் என்ற சொல் நா என்பதன் அடியாக பிறந்தது ஆனால் நா (நாக்கு) உடையதாக இருப்பதால் மட்டும் நாய் ஆக முடியாது பல்லி என்ற சொல் பல் என்பதன் அடியாகப் பிறந்தது ஆனால் பல் பல உயிர்களுக்கும் பொது; பல்லிக்குமட்டும் சிறப்பானது அன்று ஆகவே, தொடக்கத்தில் எவ்வாறோ அமைந்த சொற்களைப் பிற்காலத்தில் அறிகுறிகளாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கொள்வதே பொருந்தும்

சொல்லியல் ஆராய்ச்சியில் முழு வெற்றிபெறும் நோக்கம் வேண்டியதில்லை இயன்றவரையில் சொல்லின் தோற்றத்தையும் வரலாற்றையும் ஆராய்ந்தால் போதும். ஒரு சொல்லின் பழைய வடிவமாக நமக்கு எட்டுவது எது எனவும், அது அக்காலத்தில் என்ன பொருளில் வழங்கியது எனவும் ஆராய்ந்து அறிவதுடன், பிற்காலத்தில் அந்துச் சொல் நாட்டின் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வெவ்வாறு வழங்கியது என்பதையும் ஆராயலாம் அந்தச் சொல்லின் வடிவம் மாறிய காரணங்களையும் காணலாம் சிதல் என்பது பழைய சொல்; சிதைப்பது (சிதை>சிதல்) என்ற பொருளில் தோன்றியது; இகரம் எகரமாக ஒலித்தல் (இணை-எணை, இலை-எலை) உண்டு ஆசையால் சிதல் என்பதே பிற்காலத்தில் செதல் எனத்திரிந்து, செல் (செதல்> செல்) எனக் குறுகியது இவ்வாறு எட்டும் அளவிற்கே சொல்லின் தோற்றமும் வரலாறும் அறியப்படும்

பிற மொழியிலிருந்து வந்த சொற்களானால், அந்தச் சொற்களின் வரலாறு நாட்டு மக்களின் வரலாற்றோடு