பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

செந்தமிழ் பெட்டகம்

அமைகின்றன அறிவு வளராத நிலையில் பாடுபட்டுச் சில சொற்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும்; அவற்றை மறவாமல் காக்கவும் முடியும்; மிக நீண்ட சொற்களாக இருந்தாலும் கற்றுக் காக்க முடியும் அறிவு வளர வளர ஆயிரக்கணக்கான சொற்களைக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது; நினைத்தவுடன் அவற்றை எளிதில் பேச வேண்டிய தேவையும் ஏற்படுகிறது அந்த நிலையில் நீண்ட சொற்கள் பல இருப்பது, பேசும் முயற்சிக்கு வீண்தொல்லையே ஆகும்; அறிவு வளர்ச்சிக்கும் தடை ஆகும் ஆகவே அவற்றை நாவில் பயின்று வழங்கக்கூடியவாறு சிறு சிறு சொற்களாக்கிக் கொள்கின்றனர்

நீண்ட சொற்கள் சிறுசிறு சொற்களாக மாறி அமையும் நிலையில் எழுத்து வழக்கம் தோன்றியது அப்போது எழுதிய வடிவங்களே சொற்களுக்கு நிலையான வடிவங்களாகக் கருதப்பட்டன. அந்தச் சிறு சொற்களே மற்றச் சொற்களுக்கு வேர் போனறவை என்ற கருத்து எழுந்தது; அவை அடிச்சொற்கள் என்று பெயர் பெற்றன

அதன் பிறகு புதிய புதிய கருத்துக்கள் வளர வளர, அந்தப் புதுக் கருத்துகளை உணர்த்தப் புதுச் சொற்கள் தேவையாயின. அப்போது இரண்டு மூன்று சிறு சொற்களை ஒன்றாகச் சேர்த்துப் புதிய சொற்களை ஏற்படுத்தினார்கள் மண், வெட்டு, இ என்பவை தனித்தனிச் சொற்கள் இந்த மூன்றையும் சேர்த்து ஒரு கருவிக்குப் பெயராகப் புதிய சொல்லை ஆக்கினார்கள்; 'மண்வெட்டி' என்றார்கள் இவ்வாறு காலப்போக்கில் கருத்து வளர்ச்சிக்கு ஏற்றபடி வளர்ந்த சொற்களே இன்று எல்லா மொழிகளிலும் மிகுதியாக உள்ளன

இந்தச் சிறு சொற்கள் ஒன்றோடொன்று சேரும் முறை ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு வகையாக உள்ளது இரண்டு மூன்று சிறு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, அவை பிரிக்க முடியாதபடி, ஒன்றோ-