பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

செந்தமிழ் பெட்டகம்

ஏற்கும் முறையும், வினைச் சொல் விகுதி ஏற்கும் முறையும் ஒவ்வொரு சொல்லுக்கு ஒவ்வொரு வகையாக வேறுபடும் சொல்லின் உறுப்புக்கள் தனியே பிரிகே முடியாதபடி குழம்பிச் சிதைந்த நிலையே அதற்குக் காரணம் ஆனால் தமிழ் முதலான மொழிகளில் ஒட்டு நிலை மிகுதியாக இருத்தலால், சொல்லின் உறுப்புக்கள் தெளிவாக நிற்கின்றன; ஆதலின் அவை ஒழுங்குபட்டு ஒருவகையாக உள்ளன. அதனால் தமிழில் பெயர்ச் சொற்கள் உருபு ஏற்கும் முறையும் ஒன்றே; வினைச் சொற்கள் விகுதி ஏற்கும் முறையும் ஒன்றே

தமிழ்மொழியில் ஒட்டுநிலை மிகுதியாக இருப்ப தால், கருத்துகளின் பல பகுதிகளும் ஆங்கில வாக்கியத்தில் தனிநிலைச் சொற்களில் உள்ளவாறே தனித்தனியே பிரித்து உணரக் கூடியவாறு அமைந்துள்ளன வந்திலேன்= did not come, வா+ந்+த்+இல்+ஏன், ஏன்-I, த் did, இல்-not, வா-come எனப் பகுத்தறியலாம்

இவ்வாறு பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் அமைந்து வளரும் முறை தமிழில் தெளிவாக இருப்பதால், சில அடிச்செற்களைக் கொண்டு அளவற்ற புதிய கருத்துகளை விளக்கும் சொற்களை அமைக்கும் வாய்ப்பு இந்த மொழிக்கு எளிதாக உள்ளது

சொற்பொருளியல்:

சில சொற்களுக்குத் தொடக்கத்தில் என்ன பொருள்கள் அமைந்திருந்தனவோ அப்பொருள்களே இன்ற வரையில் மாறாமல் வழங்குதல் உண்டு மண், நிலம், கை, வாய், முயல், கிளி முதலான சொற்களின் பொருள்கள் மாறாமல் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. சில சொற்களின் பொருள்கள் காலப் போக்கில் படிப்படியாக மாறி அமைவதும் உண்டு பொன் என்ற சொல் பழங்காலத்தில் பொதுவாக உலோகம் என்பதைக் குறித்து, இன்று உலோகங்களுள் சிறந்த ஒன்றைமட்டும் குறிக்கின்றது நெய் என்ற