பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

89

சொல்லின் பொருளும் அவ்வாறே மாறியமைந்துள்ளது தொடக்கத்தில் பல வகை எண்ணெய்ப் பொருளைக் குறித்து வந்த அந்தச் சொல் இக்காலத்தில் பாலிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் ஒன்றைமட்டும் குறிக்கின்றது

ஆகவே, சொல் முதலில் உணர்த்திய பொருளையே இன்றும் உணர்த்த வேண்டும் என்பதில்லை நாணயங்களின் மதிப்பு, காலப்போக்கில் மாறுதல் அடைவது இயற்கை அந்த மாறுதல் காரணமின்றிக் கண்மூடி நிகழும் மாறுதல் அன்று ஒரு முறை பற்றிய காரணத்துடன் நிகழ்வதே. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சொல் உணர்த்தும் பொருளின் வரலாற்றை ஆராய்தல் சொற்பொருளியல் ஆகும்

சொல்லின் பொருள் மாறுவதற்கு உரிய காரணங்களாக அறிஞர் கூறுபவை: (1) ஒரு சொல் உணர்த்தும் பொருள் விரிவானதாகவும் பலவற்றைத் தன்னுள் கொண்டதாகவும் இருத்தலால் அது மெல்ல நெகிழ்ந்து நெகிழ்ந்து மாறுதல், (2) ஒரு சொல் உணர்த்தும் பொருளின் பல பண்புகளில் அல்லது பல பகுதிகளில் ஒன்று சிறந்து விளங்கும்போது, அந்தச் சொல் பலவற்றையும் உணர்த்துவதிலிருந்து மெல்ல மெல்ல மாறி, அந்தச் சிறப்பான பண்பையோ பகுதியையோ மட்டும் உணர்த்துதல், (3) ஒரு சொல் உணர்த்தும் பொருளை அடுத்து அதனுள் மற்றொரு பொருளும் மறைந்திருக்கும்போது இரண்டு பொருளையும் தழுவி உணர்த்தவோ அல்லது இரண்டாம் பொருளைட்டும் சுட்டவோ அந்தச் சொல் இடந்தரல், (4) ஒரு பொருளை வற்புறுத்திக் கூறும் பொருட்டாகவோ, தெளிவுறுத்திக் கூறும் பொருட்டாகவோ ஒரு சொல்லை உருவகப்படுத்தி ஆளுதல், (5) உணர்ச்சி மிகுதியாகக் கூறும் போது ஒரு சொல்லின் உண்மைப்பொருள் மறைந்து, அதனினும் விரிவான அல்லது குறுகிய மற்றொரு பொருள் தோன்றுதல், (6) எள்ளல் முதலிய குறிப்புக் காரணமாக, அல்லது இடக்கரடக்கல், மங்கலம்