பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

93

வற்றிற்கும் காதல், முதலியவற்றிற்கும் பிரதிபலிக்கச் செய்யும் பொருளின் தன்மையை அனுசரித்துச் சில விசேஷ வேறுபாடுகள் உண்டாகின்றன. அதனால் காரணம் முதலியவை விபாவம் முதலாய நிலையில் இன்ன மனிதர், இன்ன நேரம், இன்ன இடம் இவை போன்ற சிறப்பியல்புகளை விட்டுப் பொதுவான வடிவில் அமைகின்றன. அவ்வாறே ஸ்தாயிபாவங்களுள் சோகம், இளிவரல் முதலிய மாறுபட்ட உளவேறுபாடுகளும் அனுகூல பாவங்களாய் அமைகின்றன அதனாலே, கருணம் (சோகத்தால் உண்டாவது) பீபத்லம் (இழிவரலால் உண்டாவது) முதலிய ரஸங்களிலும் நமக்குச் சுவையும் ஈடுபாடும் உண்டாகின்றன

நல்லறிவாளன் தன் தூய உள்ளத்தில் இந்த விபாவம் முதலியவைகளை மீட்டும் மீட்டும் நினைக்குஞ் செயலுக்குச் சுவைத்தல் (சர்வணம்) என்று பெயர் அவ்வாறு சுவைக்கும் நிலையில் கரும்பின் துண்டிலிருந்து இனிப்புச்சவை உண்டாதல் போன்று, விபாவம் முதலியவற்றிலிருந்து சிருங்காரம் முதலிய ரஸம் தோன்றும்

காதல் முதலிய உளவேறுபாடுகள் நல்லறிவாளருள்ளத்தில் ஆதிகால முதலே வசனாரூபமாய்ப் படிந்துள்ளன அவற்றை விபாவம் முதலியன எழுப்பி விடுகின்றன என்போலவோவெனின், பொருள்களில் அமைந்து கிடக்கின்ற மின்சாரத்தைத் தேய்த்தல் வெளிப்படுத்துவது போல என்க இவ்விபாவம் முதலியவை ஒருங்கு சேர்ந்து ஆகிய சிறப்பியற்செயலால் பூர்வ வாசனைக்கு எழுச்சி வருவதனோடு உள்ளம் ராஜஸ் தாமஸ் குணங்கள் அகலப்பெற்றுச் சுத்த சத்துவமாய்ச் சமைகின்றது. ஆத்மா அஞ்ஞானத் திரையினின்று நீங்கிச் சிற்பிரகாச ஆனந்த ரூபமாய் விளங்குகிறது இத்தகைய சத்துவநிலை அடைந்த உள்ளத்திற்கு இத்தகைய ஆத்துமசாட்சியாய் விஷய-