பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமஸ்கிருதம்

தோற்றம்

வளர்ச்சி

மஸ்கிருதம் என்பது இந்தியாவின் முது மொழிகளில் ஒன்று இது இந்தியாவின் பொதுமொழி, செம்மொழி இந்து மதம் பண்பாடு ஆகிய இரண்ருக்கும் அடிப்படையான மொழி இது இன்று மக்களிடையே பேச்சு வழக்கிலில்லாமற் போயினும் இதிலுள்ள நூல்களைப் படித்து ஆராய்ந்து வரும் புலவர் கூட்டங்களில் இது பேசப்பட்டே வருகிறது. மேலும், இந்த மொழியில் இன்றும் புதிய செய்யுள்களையும், நாடகங்களையும் வேறு நூல்களையும் பலர் ஆக்கிவருகின்றனர் சுமார் 12 சமஸ்கிருதப் பத்திரிகைகள், வாராப் பத்திரிகைகள் உட்பட இன்று வந்துகொண்டிருக்கின்றன

இந்தியாவில் வழங்கிவரும் மொழிகளை இலக்கணவாசிரியர் வகுத்திருக்கம் பிரிவுகளையொட்டி நான்கு பெரிய மொழிக் குடும்பங்களாகப் பிரித்துக் கூறலாம்; இவை இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், ஆஸ்திரியம், திதெத்தோ-சீனம் என்பன தொகைப் பெருமையில் இவை மேலே தந்திருக்கும் வரிசையை ஒட்டியே இருக்கின்றன இலக்கிய வளர்ச்சிக்கு நிலைக்களன், பண்பாட்டு மலர்ச்சிக்கு வாயில் என்ற இரண்டு சிறப்புகளையும் பெற்றிருக்கும் இந்திய மொழிகளுக்குள் பெரும்பாலான மொழிகள்