பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 செந்தமிழ் பெட்டகம்



சுட்டியுள்ளன. மேலும், அகம், அகப் பாட்டு என்னும் பெயர்களாலும் உரையாசிரியர் முதலியோர் இத் தொகை நூலைக் குறித்துள்ளனர்

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் உள்ளன. இந்த நானூறு பாடல்களும் களிற்றியானை நிரை (1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன அன்றியும், இதன்கண் உள்ள பாடல்கள் தக்கதொரு நியமத்தை மேற்கொண்டு அமைந்துள்ளன. ஒற்றைப்பட்ட எண்களையுடைய பாடல்கள் (1, 3, 5, 7, 9, 11) முதலியவை) பாலைத்திணை பற்றியனவாகும் 2, 8, 12, 18 என்று இவ்வாறு இரண்டும் எட்டுமாக வரும் எண்கள் குறிஞ்சித் திணை பற்றிய பாடல்களாக உள்ளன. 4, 14, 24 என்று இவ்வாறுள்ள நான்காம் எண்கள் முல்லைத் திணைக்கு உரியன. 6,16, 26, 36 பற்றிய பாடல்களாகும். 10, 20, 30 என்று இவ்வாறு வரும் பத்துப் பத்தான எண்கள் நெய்தல் திணைக்கு உரியனவாம் இவ்வகையான முறையில் ஐந்திணை. அமைப்பு தொகை நூல்களில் இந் நூலுக்கு மட்டும் அமைந்திருத்தலும் சிந்தித்தற்குரியது.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர் இம் மூன்று செய்திகளும் சில பழங் குறிப்புக்களிலிருந்து நமக்குத் தெரிய வருகின்றன. மூன்று பாடல்களின் (114, 117.165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 142.

இத் தொகை நூலின் முதல் தொண்னுாறு பாடல்களுக்குப் பழைய உரை உள்ளது. இது மிகச் சிறந்த உரையாகும். நூல் முழுமைக்கும் இவ் உரை கிடைக்காமற் போனது ஒரு பெருங்குறையே அகப்பொருள் நூலாயினும் இதில் வரும் வரலாற்றுக் குறிப்புக்கள் மிகப் பலவாகும்.