பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

103


வர்ணம் தீட்டுங்கோலும் பயன்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அக்காலத்தில் வழங்கிய நாடக நூல்களில் சிலவற்றின் பெயர்கள் மாத்திரம் கிடைத்திருக்கின்றன. அந்நூல்கள் பெரும்பாலும் மறைந்து போயின, அவைகளெல்லாம் நாடக இலக்கண நூல்களே. இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் கூறுதல் என்றும் சூத்திரப்படி இலக்கண நூல்கண் உண்டாவதன் முன் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், அக்காலத்தில் நாடக இலக்கிய நூல் ஒன்று கூட நமக்குக் கிடைக்கவில்லை. அக்காலத்தில் நடைபெற்ற நாடகங்களிலே மிகச் சிலவற்றின் பெயர்கள் மாத்திரமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. அன்றியும், கண்ணபிரான் பல தேவரோடும் நப்பின்னைப் பிராட்டியோடும் ஆடிய நாடகங்கள் நடைபெற்றனவதாக அறிகிறோம். இவைக ளுக்குப் பாலசரிதை நாடகங்கள் என்று பெயர் மற்றும் சிலப் பதிகாரம் என்றும் நூல் நாடகக் காப்பியம் ஆகும்.

இதுகாறும் நாடகம் என்று கூறியது கதை தழுவி வரும் கூத்தேயாகும்; சாகுந்தலம், ஹாம்லெத் போன்ற நாடகவகையன்று.

பண்டை நாடகத் தொடக்கத்தில் தெய்வ வணக்கம் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. இதற்கு அரங்க பூசை என்று பெயர். இப்பூசை, “மூவடி முக்கால் வெண்பாவால்” இயற்றப்படுவது வழக்கம். இது நாடகம் குறையின்றி நடக்கத் தெய்வங்களை வணங்குவதாம். இது பெருந்தேவ பாணி, சிறு தேவ பாணி என்று அக்காலத்தில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டதாக அறிகிறோம். பெருந்தேவபாணி பலதேவரைத் துதிப்பதாகும் . சிறு தேவபாணி வருணபூதரைத் துதிப்பதாகும். இத்தெய்வ வணக்கமானது தற்காலம் விநாயகர் துதி, சரஸ்வதி துதி என்று மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. அன்றியும் நாடகம் தொடங்கு முன், அந்தரக்கொட்டு’ என்று ஒரு வகைக் கூத்தாடுவது வழக்கமென்று சிலப்பதிகாரத்தி