பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

105


கடைக் கண்களின் அபிநயமாகும்” என்று வெகு அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.

இனி இடைக் காலத்து நாடகங்களும் கதை தழுவிய கூத்துக்களே. இவைகளைப் பற்றி நாம் சில விஷயங்களில் உறுதியாய்க் கூறச் சில ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தஞ்சாவூர் பிருகதீச்வரர் ஆலயத்தின் கல்வெட்டு ஒன்றில் தமிழில் இராசராசேசுவர நாடகம் என்பதை விசயராசேந்திர ஆசாரியனைத் தலைவனாகவுடைய சில நடிகர்கள் அக்கோயிலில் வைகாசி மாதத்து விழாவில் ஆடிய தாகவும், அவர்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்கப் பட்தென்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. இக் கல்வெட்டுக்களைக் கொண்டும், திருவல்லீசுவரம், திருக்கழுக்குன்றம் முதலிய கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைக் கொண்டும், இந்த இடைக்காலத்தில் தமிழ் நாடகங்கள் எப்படி நடத்தப்பட்டனவென்று அறியக்கூடும்.

அக்காலத்திய நாடகங்கள் கோயில் உற்சவ காலங்களில்தான் பெரும்பாலும் நடத்தப்பட்டன. அவை கோயில்களுக்குள்ளேயே நடந்தன; அவற்றில் நடித்தவர்கள் ஒரு கூட்டத்தாராகக் கருதப்பட்டனர். அவர்களுள் ஒருவர் தலைவராக (ஆசிரியராக)க் கருதப்பட்டார்; அவர்களுக்கு அதிகாரிகள் இவ்வளவு காணிக்கை யென்று கொடுத்து வந்தனர். மேற்சொன்ன தலைவர்களில் ஒருவன் திருவாளன் என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிற படியால், நாடகம் அக்காலத்தில் இழிவாகக் கருதப்படவில்லை என்றும் நாம் கருதலாம். மேலும் அந்நாடகங்கள் எல்லாம் பெரும்பாலும் புராணக் கதைகளாகவும், தலமான்மியக் கதைகளாகவும் இருந்தன என்று கூறலாம்.

இக்காலம் மேற்குறித்த இராசராசேசுவர நாடகத்திற்குப் பதிலாகத் தஞ்சாவூர் கோயிலின் பிரமோற்சவத்தில் அஷ்டகோடி எனும் எட்டாம் நாள் உற்சவத்தின் இரவு சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் என்பது, கோயில் தாசிகளால் ஆடப்பட்டு வருகிறது; குற