பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

செந்தமிழ் பெட்டகம்


கையில் ஏந்தி, பிணங்களைக் குத்தித் திருப்பி வேகவைக்கும் கோலுக்குப் பதிலாக வெள்ளித் தடியொன்றை வைத்துக் கொண்டு தோன்றுவான். ஒருவர் கண்ணுக்கும் புலப்படாத தாலி ஒன்று தவிர வேறொன்றுமில்லாத சந்திரமதி அக்காட்சியில் பல ஆபரணங்களும், மற்றவர்கள் வெகுமதியாகக் கொடுத்த பொற் பதங்கங்களுடம் அணிந்து நடிப்பாள், சில சமயங்களில் ஒரே காட்சித் திரை தெருவாகவும் தோட்டமாகவும் இருக்கும். சங்கீதத்தில் முக்கியக் குறை என்னவென்றால், பழைய பின்பாட்டு என்பதேயாம்.

ஒரு நடிகன் மேடை மீது ஆரம்பித்துப் பாடும் போது அவன் பாடும் ஒவ்வொரடியையும் திரையின் பக்கத்தில் நிற்கும் பலர் பெரிய குரலில் பாடுவார்கள். அப்படி அவர்கள் பாடும்போது, மேடை மீது நடிக்கும் நடிகனும் சும்மா நின்று கொண்டிருப்பான். அன்றியும நடிகர்கள் தாங்கள் பாடும் பாட்டுக்களின் பொருளைப் பிறகு வசனமாகச் சபையோருக்குத் தெரிவிப்பார்கள். ஒரே நாடகம் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு சனிக்கிழமையில் ஆடப்படும். உதாரணமாக அரிச்சந்திர விலாசம் ஆடி முடிப்பதற்குச் சில சமயங்களில் ஆறு மாதம் பிடிக்கும்.

மேற்குறித்த படி ஆடப்பட்ட நாடகங்களுக்கு உதாரணமாக பெங்களுர் அப்பாவு பிள்ளை இயற்றிய சத்திய பாஷா அரிச்சந்திர விலாசத்தையும், காசி விசுவநாத முதலியார் இயற்றிய டம்பாச்சாரி விலாசத்தையும் கூறலாம். அக்காலத்தில் பிரபலமாயிருந்த மற்றொரு தமிழ் நாடகம் இந்திர சபா என்பதாம். இப்படிப்பட்ட சில நாடகங்கள் அச்சிடப்பட்டிருந்த போதிலும் அவற்றை மேடை மீது நடிக்கும் நடிகர்கள் தங்கள் இச்சைப் படி வசனங்களைச் சேர்த்துப் பேசுவது வழக்கமாயிருந்தது. இக்குற்றங்களெல்லாம் ஒருவாறு குறைக்கப்பட்டுத தமிழ் நாடகமானது கொஞ்சம் சீர்திருத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் புனாவிலிருந்த