பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

117


கூறினால் மிகையாகாது ஆனால் அவற்றுள் எதுவும் இக்காலத்தில் கிடைப்பதாக இல்லை.

பின்னர் தோன்றிய அருணாசலக் கவிராயரின் (171279) இராம நாடகமும் கோபால கிருஷ்ண பாரதியார் (18 ஆம் நூ) இயற்றிய நந்தன் சரித்திரம் முதலியவைகளும் இசை நாடக வகையில் சிறந்தவை.

18ஆம் நூற்றாண்டில் குறவஞ்சி நாடகம், பள்ளு நாடகம், நொண்டி நாடகம் போன்ற நாடக வகைளும் தோன்றின. திரிகூட ராசப்பக் கவிராயர் (த.க) இயற்றிய குற்றாலக் குறவஞ்சியும் மாரிமுத்துப் பிள்ளையின் நொண்டி நாடகமும் புகழ் பெற்றவை.

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய முக்கூடற்பள்ளு, பள்ளு நாடகங்களில் மிகவும் சிறந்ததாகக் கருதப் பெறுகிறது. இந்த நூற்றாண்டில் சுமார் நூறு நாடகங்கள் அச்சாயின என்று தெரிகிறது. அவற்றுள் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைப் பற்றிய நாடகங்களும் உண்டு.

ஆனால் இலக்கிய முறையில் தோன்றிய முதல் தமிழ் நாடகம் சுந்தரம்பிள்ளை எழுதி 1891-ல் வெளியிட்ட மனோன்மணியம் என்பதாகும். இது செய்யுள் உருவில் இயற்றப் பெற்றது. அரங்க மேடையில் நடிப்பதற்காகச் செய்யவில்லை என்றும், காவிய இலக்கியமாகப் படிப்பதற்காகவே எழுதப்பெற்றது என்றும் ஆசிரியர் தம் முகவுரையில் கூறினார். இது ஆங்கில ஆசிரியர் லிட்டன் பிரபு எழுதிய மறை வழி என்னும் கவிதையைத் தழுவி எழுதப்பட்ட நூல். சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்ததது. நாடக பாத்திரங்கள் மிகத் திறம்படச் சித்திரிக்கப்பட்டுளர். பேச்சுக்கள் உணர்ச்சி மிகுந்தன. நடை கம்பீரமானது. - சூரிய நாராயண சாஸ்திரியார் தமிழ், வட மொழி, ஆங்கிலம் முதலிய மொழி நூல்களை ஆய்ந்து நாடகவியல் என ஒரு நூல் எழுதினார். ரூபாவதி,