உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமஸ்கிருத


நாடக


இலக்கியம்


உலக நாடக இலக்கியத்திலேயே கிரேக்க நாடகத்திற்குப் பிறகு சிறப்பு வாய்ந்ததாயும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வளர்ந்ததாயும் உள்ளது,. இந்தியாவில் சமஸ்கிருதத்தில் அசுவகோஷன, பாசன், காளிதாசன் (த.க), சூத்திரகன் முதலியோர் வளர்த்த நாடகக் கலையாகும், இக்கலை இந்திய இலக்கியத்தில் தலை சிறந்த மலர்ச்சியுமாகும். கி.மு. 400க்கு முன்பே இக்கலை உருவடைந்திருக்க வேண்டுமென்பதற்குச் சான்று பாணினி தம் சூத்திரங்களில் நடிகர்களின் உதவிக்காக, சிலாலி, கிருசாசுவர் என்ற இரு ஆசிரியர் சூத்திரங்கள் எழுதியிருந்தனர் என்ற மேற்கோள் ஆகும்.

வேதத்திலும், இராமாயண மகா பாரதங்களிலும் நடிகர், ஆட்டம் முதலியன பேசப்படுகின்றன. கி.மு. 3 ஆம் 4 ஆம் நூற்றாண்டுகளில் பாடலிபுத்திரத்தில் ஆண்ட மெளரிய மன்னரின் அவையில் சுபந்து என்ற கவி வாசவதத்தா நாட்டியதாரா என்றதோர் அற்புத நாடக அமைப்பைச் செய்தார். இதில் ஒவ்வொரு முன் அங்க நடிகரும் பின் அங்கக் காட்சிக்குச் சாட்சிகளாய் வீற்றிருக்க, அங்கத்துள் அங்கமாகக் கதை வளர்க்கப் பட்டிருக்கிறது. சாதாரண முறையில் நாடகங்கள் ஏற்பட்டு, மிகுதியும் பழகிப்போன பிறகே இது மாதிரியான கற்பனைகளில் புத்தி செல்லும். நாடகத் துறை யையே சிறப்பாக வளர்த்த பாச மகா கவியும் மெளரியர் காலத்தவரே என்று கருதப்படுகிறார்.