பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

123


ரையை ஜெர்மானிய கவி கோதெ, தன் பொளஸ்ட் என்ற நாடகத்தில் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த நாடகங்கள் ஆடுவதற்காக எழுதப் பட்டவையே. கோயிலிலும், பொது வெளியிலும் ஆடப்பட்டவையே தவிர, கட்டப்பட்ட நாடக மேடையிலும் ஆடினர். சதுரம், செவ்வகம், திரிகோணம் என்ற மூவகை நாடக மன்றங்கள் வருணிக்கப்படுகின்றன. பெண், ஆண் பாத்திரங்களையும் ஏற்று ஆடிய, முழுதும் பெண்களாலான நாடகக் குழுவினரும் இருந்தனர். இவர்கள் ஊரூராய்ச் சென்றும் ஆடினர். நாடகப் போட்டிகளும் உண்டு. காலை, பிற்பகல், மாலை, இரவு எல்லா வேளைகளிலும், ஆடினர். நாடக மேடையும் உடையும் இருந்தனவே அல்லாது திரைகளும், இன்று, நாம் கையாளும் அரங்கில் வைக்கப்படும் பல பண்டங்களும் முன் இல்லை.

அபிநயத்தாலும் ஆட்டத்தாலும் பின்னணிப் பாட்டாலும் பரத நாட்டிய முறையில் இடமும், வந்து போகும் ஆட்களின் விவரமும், பிறவும் பார்ப்போருக்கு விளக்கப்பட்டன. நாட்டிய சாத்திரத்திற்கு அங்கமாகவே முதன் முதலில் இசைக் கலையைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். எனவே இன்றும் வழக்கத்தில் இருந்துவரும் கதகளி போன்ற நாட்டிய நாடக முறையைத் தழுவியே பண்டைக் காலத்தில் சமஸ்கிருத நாடகம் ஆடப்பட்டது எனலாம். இதுவே இந்தியாவிற்கு ஏற்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த நாடக வழக்கு. முன் நூற்றாண்டுகளில் சமஸ்கிருத நாடகமும் இசையும் ஆட்டமும் சீனம், கம்போடியா,லோ ஆஸ், சீயம், இந்தோனிசியா, பர்மா, சிங்களம் முதலிய நாடுகளில் பரவின. இன்றும் இராமாயண மகாபாரதக் கதைகளைத் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நாட்டிய முறையில் ஆடி வருகின்றனர். -

சமஸ்கிருத நாடகம் காதல் துறையில் பெரும்பாலும் பிரிவாற்றாமைமையையே அதிகமாகக் காட்டும்.