பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

செந்தமிழ் பெட்டகம்


பட்ட நாராணயர்

800 க்கு முன்னால் இருந்தவர் இவர் வேணிசம்மாரம் என்னும் நாடகத்தை எழுதியுள்ளார். துச்சாதனன் திரெளபதியின் தலை மயிரை அவிழ்த்து இழுத்தது முதல் கட்டப்படாத கூந்தலை வீமசேனன் கெளரவர்களைச் கொன்று இரத்தம் தோய்ந்த தன் கைகளால் மறுபடியும் கட்டுவதால் இதற்கு வேணி (கூந்தல்) சம்மாரம் (கட்டுவது) என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆறு அங்கங்களைக் கொண்ட இந்த நாடகத்தில் ஆங்காங்கு வீர ரசம் ததும்பும் இடங்களுண்டு.

அன கஹர்ஷ மாயூராஜன் அல்லது மாத்திர ராஜன்:

இவர் உதயணன் கதையை தாபசவத்சராஜ சரிதம் என்னும் நாடகமாக எழுதியுள்ளார். மற்றும் உதாத்தராகவம் என்னும் ஒர் இராமாயண நாடகமும் செய்துள்ளார்.

முராரி :

இவர் சுமார் 800-ல் இருந்தவர். தம்மைப் பாலவால்மீக்கி என்று சொல்லிக் கொள்கிறார். அநர்க்க ராகவம்என்ற ஏழு அங்கங்களைக் கொண்ட நாடகத்தில் இராமாயணக் கதையைச் சிலவிடங்களில் மாற்றி எழுதியுள்ளார்.

இராஜசேகரன் :

சுமார் 900-ல் இருந்தவர். இவர் நான்கு நாடகங்கள் எழுதியுள்ளார்.

பால. இராமாயணம் :

இது பத்து அங்கங்களைக் கொண்ட நாடகம். இராமாயணக் கதையையே சில மாறுதலுடன் சொல்கிறது.