பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

செந்தமிழ் பெட்டகம்


ஷேமீச்சுவரன் (10 ஆம் நூ.) இவர் நளன் கதையை கைஷதானந்தம் என்ற ஏழு அங்க நாடகமாகவும், அரிச்சந்திரன் கதையை சண்ட கெளசிகம் என்ற ஐந்து அங்க நாடகமாகவும் எழுதியுள்ளார்.

ஜயதேவர் சுமார் 1200-ல் இருந்தவர். பிரசன்ன ராகவம் என்ற ஏழு அங்க நாடகத்தில் இராமாயண கதையை வகுக்கிறார்.

ரவிவர்மா 13 ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் அரசு புரிந்தவர். பிரத்தியும்னாப்யுதயம் என்ற நாடகத்தையியற்றி யுள்ளார்.

ஜயசிம்ம சூரி (13 ஆம் நூ) ஹம்மிர மர்த்தனம் என்னும் நாடகத்தை யியற்றியுள்ளார்.

மதனர் அல்லது பாலசரஸ்வதி (13 ஆம் நூ.):

இவர் நாலு அங்கங்கள் கொண்ட விஜயஸ்ரீ அல்லது பாரிஜாத மஞ்சரி என்ற நாடிகையை எழுதியுள்ளார். இதன் இரண்டு, அங்கங்கள் தாரா நகரத்தில் கல்லின் மேற் செதுக்கப்பட்டுள்ளன.

வாமனபட்டபாணன் (14 ஆம் நூ.) பார்வதி பரிணயம் என்னும் நூலை இயற்றியுள்ளார். -

மணிகன் 14 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். நேப்பாள கவி பைரவானந்தம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.

ஹரிஹரன் (15 ஆம் நூ.) பர்த்ருஹரிநிர்வேதம் என்ற நாடகத்தைச் செய்துள்ளார்; இதில் பர்த்ருஹரியின் கதை சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

ரூபகோஸ்வாமி : 16 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தவர் சைதன்யரின் சீடர். விதக்தமாதவம், லலிதாமாதவம் என்ற இரண்டு நூல்களையியற்றியுள்ளார்.

சேஷகிருஷ்ணன் (17 ஆம் நூ. ) அக்பருடைய மந்திரியின் குமாரரான தோடர்மாலுக்காகக் கம்சவதம் என்கிற ஏழு அங்க நாடகத்தை எழுதியுள்ளார்.