பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

129


மதுராதாஸன் கி.பி. 18 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தவர். விருஷபாநுஜா என்னும் நாடிகையை எழுதினவர்.

ராமபத்திர தீஷிதர் (17 ஆம் நூ. இறுதி) ஏழு அங்கங்களைக் கொண்ட ஜானகீபரிணயம் என்னும் இராமாயண நாடகத்தை எழுதியுள்ளார். இவர் தஞ்சை மாவட்டத்தில் சிறந்த கவிஞராக விளங்கினார். -

சில நாடகங்கள் வேதாந்தக் கொள்கைகளையும் தத்துவங்களையும் எளிதில் விளக்குவதற்காக எழுதப்பட்டுள்ளன.

கிருஷ்ணமிசிரர் (11 ஆம் நூ. ) பிரபோதசந்திரோதயம் என்னும் ஆறு அங்க நாடகத்தை இயற்றியிருக்கிறார். இது தத்தவத்தை எளிதாகப் போதிக்கின்றது. இதில் விவேகம், மோஹம் முதலியவை பாத்திரங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. விஷ்ணு பக்தி, அத்துவைதம் இவற்றின் மேன்மையை விளக்குகின்றது.

வேங்கடநாதர் அல்லது வேதாந்த தேசிகர் (14 ஆம் நூ. ) சங்கற்ப சூரியோதயம் என்னும் நாடகத்தை எழுதியுள்ளார்.

யசப்பாலன் (14 ஆம் நூ, ) மோகராஜபராஜயம் என்னும் ஐந்து அங்க நாடகத்தை எழுதியிருக்கிறார். ஜைனதத்து வத்தின் மேன்மையை இது விளக்குகின்றது.

கவிகர்ணபூரர் (16 ஆம் நூ. ) சைதன்னிய மதத்தின் மேன்மையை விளக்கும் சைதன்னிய சந்திரோதயம் என்னும் நூலை இயற்றியிருக்கிறார். s -

கோகுல நாதர் (17 ஆம்நூ. ) அமிருதோதயம் என்னும் நூலை இயற்றியிருக்கிறார்; நியாய சாத்திரத்தின் படி வீடு கிட்டும் வகை இதில் காண்பிக்கப்படுகிறது.

வேதகவி (18 ஆம் நூ.) வித்தியா பரிணயம் என்னும் சமய நாடகத்தை இயற்றியுள்ளார். தஞ்சை மகாராஷ்டிர மன்னரிடம் இருந்தார். ஆயுர்வேதத்தின் கொள்கைகளை

செ. பெ.-l-9