உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

செந்தமிழ் பெட்டகம்


தீர்மானித்துக் கொண்டு, கருத்தரிந்திருந்த அவளை வீட்டை விட்டு வெளியேற்ற, அவள் காடு சென்று, அங்கு வேட்டுவப் படைத்தலைவன் அகத்தில் தங்க, பின் தக்க சான்றுகளால் அவள்பால் கொண்ட தப்பெண்ணம் நீங்கிய மாமன் தான் செய்த பாவத்திற்குப் பிராயச்சிதமாய்த் தீர்த்த யாத்திரைக்குப் புறப்படுகிறான். மருமகள் தன் காட்டு விடுதியில் பிரசவித்திருக்கும் போது அவள் கணவன் வந்து குழந்தை பிறந்த நட்சத்திரத்திலிருந்து நடந்தவற்றைச் சரிவர உணர்வதால் எல்லோ ருடைய மனத்திற்கும் அமைதியும் களிப்பும் ஏற்படுகின்றன.

மேற்கோள்களில் அதிகம் ஆளப்பெறாமல் சிறிதே சொல்லப்படும் பிரகரணங்கள், வேசியையே நாயிகையாய்க் கொண்ட தரங்க தத்தமும், ரங்கவிருத்தமும், காம தத்தமும் ஆகும். சுத்தி வாச குமாரன் அனங்க சேனா ஹரிநந்தி என்னும் பிரகரணம் எழுதினான். அமாத்திய சங்குகன் சித்திரோத் பலாவலம்பிதகம் என்றொரு பிரகரணத்தைச் செய்தான். ஆசிரியர் பெயர் தெரியாத வேறிரண்டு பிரகணங்கள் பிரயோகாப்யுதமும், பத்மாவதி பரிணயமும்.

இவற்றைப் போல் வேறு பல பிரகரணங்கள் இருந்திருக்க வேண்டும். இவைகளிலிருந்து இந்திய ஆசிரியர்களுக்குச் சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபாடில்லை என்று உலவிவரும் அபவாதம் முற்றிலும் தவறு என்பது புலனாகும்.

ராமச்சந்திரன் என்ற சைன கவி கெளமுதிமித்திரா நந்தம் என்றும், பிற்காலத்தில் உத்தண்டகவி மல்லிகா மாருதம் என்றும் இரண்டு பிரகரணங்களை இயற்றினர். ஆனால், இவற்றில் நாடகச் சிறப்பொன்றுமில்லை.

பிரகசனம், பாணம் :

சமஸ்கிருத நாடக இலக்கியத்தில், நாடகம், பிரகரணம் என்ற முதல் இரண்டு வகைகளுக்கு அடுத்தாற்