பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

செந்தமிழ்மெட்டகம்


பகவான், அச்சுகை என்ற இருவரை முக்கியப் பாத்திரங்களாகக் கொண்டது. பகவான் ஒரு துறவி, அச்சுகை ஒரு தாசி. காஞ்சியில் ஒரு மாலை நேரத்தில் துறவி தம் சீடருடன் தோட்டத்திற்கு வருகிறார். அதே சமயம் தன் காதலனைக் காணத் தாசி யொருத்தியும் அதே இடத்திற்கு வருகிறாள். அன்று மாலையில் இறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த ஒரு தாசியின் ஆவியைக் கவர்ந்து செல்ல இயமலோகத்திலிருந்து வந்த இயமதூதன் தவறுதலாகத் தோட்டத்திலிருந்த தாசியின் ஆவியைக் கொண்டு போகிறான். தாசியின் உடல் கண் முடி செத்து விழுந்ததைக் கண்ட துறவி அப்போது தம் சீடனக்குத் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருந்தாராகையால் பரகாயப் பிரவேசம் என்ற வித்தையைக் காட்டத் தம் உடலைச் சீடனிடம் ஒப்புவித்து விட்டுத் தாசியின் உடலிற் புகுந்து கொள்கிறார். அப்போது தாசியின் காதலன் வந்து சேர்கிறான். தாசி காதலனிடம் காதல் பேச்சுப் பேசாமல் தத்துவங்களை எடுத்துரைக்கிறாள். இயமலோகத்திற்குச் சென்ற இயமபடன் தவறாக மற்றோருயிரைக் கொண்டு வந்து விட்டதாகத் தெரிந்ததும், மறுபடியும் அத்தோட்டத்திற்கு வந்து, தாசியுடலில் அவள் ஆவியை விட முயல்கிறான். தாசியுடலோ உயிருடன் காணப்படுகிறது. திகைத்த தூதன் அண்மையில் துறவி உடல் ஒன்று கிடக்கக் கண்டு அதில் தாசியின் ஆவியை விட்டுவிட்டுப் போகிறான். ஆகவே திடீரென்று எழுந்து சீடருடன் காதல் மொழிகளைப் பேசுகிறார். இக் கூத்து சிறிது நேரம் சுவைக்கப்பட்ட பிறகு இயமபடனின் வேண்டகோளுங்கிணங்கிய யோகி வேசியிடலை விட, இயமபடன் அந்தந்த ஆவிகளை அவ்வுடல்களில் சேர்த்து விட்டுப் போகிறான்.

இடைக்காலத்தில் பிரகசனங்கள் எழுந்ததாகத் தெரியவில்லை பிற்காலத்தில் பல எழுதப்பட்டன. ஆனால் அவைகளிற் பெரம்பாலும் பச்சைக் காதல் பேச்சுக்கள் மலிந்திருப்பதால் மதிப்பிற்குரிய முறையில்