பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

139


நாடக வகை போன்ற விரிந்த இலக்கியமும் இதில் உண்டு; சிறிய ஆட்டத்திற்கான உருப்படி வகையும் (நிருத்தியப் பிரபந்தம்) உண்டு. சட்டகம் என்பது நாடிகை போன்றது; ஆனால், முழுவதும் பிராகிருத மொழியிலேயே எழுதப் பெற்றிருக்கும். இதன் அங்கங்களுக்கு யவனிகாந்திரம் என்று பெயர். இது சாடகம் என்று காணப்படும் மக்களின் கூத்து வகையிலிருந்து வளர்ந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. உ.ம்: ராஜசேகரன் எழுதிய கருப்பூரமஞ்சரி. அடுத்ததாக துரோடகம் என்று சொல்லப்படுவது நாடக முறையில் அமைந்தது. இதன் உண்மை உருவம் நன்கு விளங்கவில்லை. இவ்விரண்டையும் சிலர் ரூபகப் பிரிவிலும் சேர்த்துப் பேசுவர். மற்ற உபரூபக வகைகளிலெல்லாம் நாடகத்தின் அமிசங்களில் ஒன்றிரண்டு குறைவாக இருந்து வரும்.

சிரீகதிகம் என்பது ஒரு நாயிகை தன் சகியிடம் தன் காதலன் குணங்களை எடுத்துரைத்து,அவன் தன்பால் சரிவர நடந்து வராததைச் சொல்லி வருந்தும் பொருளையுடையது. சில நூல்களில் இதே போன்று பொருளமைப்பை கொண்டதாக ஷித்ககம், சிங்ககம், சில்பகம் என்ற மூன்று விதமதாகப் பேசப்படும் வகையொன்று காணப்படுகிறது. அதுவும் சிரீகதிதமாகவே இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. மேற்சொன்ன சிரீகதிதத்தில் வரும் தலைவ குலமங்கை. ஆகையால் அதன் பொருள் கெளரவமாயிருக்கும். துர்மல்லிகா என்பதில் கள்ளக் காதல் பொருளாகும்; சேர்த்து வைத்ததற்காக கூலிக்காகச் சண்டையிடும் சேடி இதில் வருவாள்.

பிரஸ்தானம் என்ற வகை தலைவன் ஏதோ காரியமாக வெளிநாட்டிற்குப் போக நேரிட, அப்பிரிவினால் ஏற்படும் காதல் துறைகளைச் சித்திரித்துக் காட்டுவது. இதில் பகுதிக்குப் பகுதி சிறப்பாகத் தாண்டவ முறையிலும், லாஸ்ய முறையிலும் ஆட்டம் வரும். முடிவில் தலைவன் வீரனாயிருப்பதனால், அவன்