பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

செந்தமிழ் பெட்டகம்


போரைச் குறித்துச் சொல்ல வேண்டியிருப்பதனால் யானை, குதிரை முதலியவற்றின் அபிநயமும் இதில் வரும், காவியம், சித்திர காவியம் என்பன இருவகை இசைக் காப்பியங்களாகும். ஒன்று ஒரே ராகத்தில் முழுவதும் அபிநயிக்கப்படும்; மற்றொன்று ஜயதேவரின் கீதகோவிந்தம் போல் பல ராகங்களில் அமைக்கப்பட்டு ஆடப்படும். இப்படிப்பட்ட ஆட்ட இலக்கிய வகையே சீரியதாய்ப் பண்டைக் காலத்தில் அதிகமாகக் கையாளப்பட்டு வந்தது.

பாணம், பாணகம், பாணிகா :

இதில் கிராமாய்ச் செய்து காட்டக் கூடிய பாட்டும், தாள வேலையும், வாத்திய இசையும் உண்டு. நடுநடுவே, பாடுபவர் பொருள்களை எடுத்துச் சொல்லுவார். இதிற் பக்தி, நல்லொழுக்கம், தருமம். இவற்றின் உபதேசமும், இவ்வுபதேசத்திற்காகக் கதைகளில் உதாரணத்திற்காகச் சிங்கம், மாடு முதலிய விலங்குகளின் நடிவடிக்கைகளை ஆடிக் காட்டுவது முதலியன காணப்படும்.

கோஷ்டி கிருஷ்ணன் அரக்கர்களை ஒடுக்குவதைச் சித்திரிக்கும். ஹல்லீஸகம், ராஸகம் இரண்டும் கிருஷ்ணன் கோபிகளுடன் சுற்றிச் சுற்றி ஆடுவது; தமிழிலக்கியத்தில் காணப்படும் ஆய்ச்சியர் குரவையும், இன்றும் நாடெங்கும் கர்ப, கும்ம, கைகொட்டிக்களி என்று பல பெயர்களில் வழங்கி வருவதும் எல்லாம் இதனுடன் தொடர்பு கொண்டனவே. இவற்றுள் பல பெண்கள் சேர்ந்து ஆடுவதால் தாமரை முதலிய பல சித்திர அமைப்புக்கள் ஏற்படும்படி சுத்த ஆட்டங்கள் வரும். இந்தச் சித்திரப் பந்தங்களுக்கு லதா (கொடி), சிருங்கலா (சங்கிலி) என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப் ‘படுகின்றன. சமியா என்பது கோலாட்டம் ; இதற்குத் தண்டராஸகம் என்றும் பெயர்.

சலிகம் அல்லது சாலிக்கியம் என்பது காளிதாசனின் மாளவிகாக்கினிமித்திரத்தில் வருகிறது. இதில்