பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

141


கூடுவதற்கு முன் காதலில் ஏங்கும் தலைவி, மறை பொருளாய்த் தன் உள்ளத்தைக் காதலனக்குப் பாட்டின் மூலமும் ஆட்டத்தின் மூலமும் தெரிவிப்பாள்.

நர்த்தனகம் என்பது முக்கியமானதோர் ஆட்ட வகையாகும்; இதைத்தான் பரதர் லாஸ்யம் என்று வருணிக்கிறார். இப்போது வழங்கும் வட இந்திய கதக்கும், தென்னிந்திய சதிரும் இதைச் சேர்ந்தவையே.

பிரேrணம் என்பதைக் காட்சி என மொழி பெயர்க்கலாம். இது காமதகனம் போல் பொதுவாக நடுத்தெருவில் பாடியாடப்படும் நிகழ்ச்சி.

டோம்பி : இதுவும் குறிக்கத்தக்கதான வகை. டோம்பர் என்பவர் பாட்டிலும் ஆட்டத்திலும் வல்லவரான கீழ்மக்கள். தொம்பன் கூத்தாடிகள் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அரிய வேலைகளான கயிற்றின் மேல் ஆடுதல், கழை நனியில் உடலை நிறுத்துதல் முதலியவற்றைச் செய்வர். டோம்பர்களுக்குத் தனியே மத்தளமும் பாட்டும் உண்டு. இவர்கள் மரபிலிருந்து எடுத்து அமைக்கப் பெற்ற இலக்கிய வகை டோம்பி என்ற உபரூபகம். ராணகன் என்ற கவி சூடாமணி என்றும், மற்றொரு கவி குணமாலா என்றும் இருடோம்பிகைகளை 10 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இயற்றியிருந்தனர் சதிரில் வருவது போல் ஒரு டோம்ப நடிகை வந்து பாடப்படும் பாட்டின் பொருளை விளக்குவாள்; ஆனால், சதிரில் செய்வது போல் பதத்திற்குப் பதம் அபிநயம் செய்யாமல், பொதுப் படையான பொருளை மட்டும் இயற்கையான மெய்ப் பாடுகள் மூலம் நடுநடுவே ஆடிக் காட்டுவாள்.

பிரேரணம், ராமக்கிடீரீடம் என்ற இரண்டிலும் ருதுக்களின் வருணனையும், விலங்குகளின் சேட்டைகளும் நற்குணங்களைப் போதித்தலும் சிறப்பாயிருக்கும். சர்க்கரீ என்பது வசந்த காலத்தில் பாடி ஆடப்படுவது. யோகினி - வலய- நந்தனம் என்பது பயங்கரமான