பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

செந்தமிழ் பெட்டகம்


மயானம், பூதம் முதலியவற்றின் காட்சிகளைக் காண்பிப்பது

இலக்கிய அமிசம் குறைவாகவும், ஆட்டக்கிரமம் பிரிவாயுமுள்ள வகைகள் பிற்காலத்தில் எழுந்தன. இவற்றுள் கொந்தலி என்பது மகாராஷ்டிர வேடர்களிடமிருந்து எடுத்து அமைக்கப்பட்டது. பேரணி, சிவப்பாகியம் என்பது சைவ ஆட்டங்கள். கோல்லாடம் என்பது சர்க்கஸ் போன்ற செய்தற்கரிய வேலைப்பாடுகளைச் செய்வது, கந்துக நிருத்தம் என்பதைத் தண்டி யாசிரியர் விரிவாய்த் தம் தசகுமார சரிதத்தில் வருணித்திருக்கிறார். இதில் பலவிதமான லயங்களையும் கதிபேதங்களோடுடைய கட்டுப்பாடு களையும் ஒட்டிப் பந்தைக் கையால் அடித்து நாற்புறம் எழுப்பி ஆடுவர்.

சிந்து தென்னாட்டு ஆட்டவகை. பாண்டிகம் அரண்மனையிலுள்ள விதூஷகர் விளையாட்டாக நகைச்சுவையும், ஆழ்ந்த பொருளும் வைத்து ராக, லயங்களும் விட்டுப் போகாமல் ஆடுவது. சாரணம் கூர்ச்சர நாட்டினர் தோஹகம் என்ற பாடல்களுடன் ஆடுவது. பகுரூபம் பகல் வேடம்போல் ஒவ்வொரு வகை மனிதரை வரிசையாகச் சித்திரித்துக் காட்டுவது ஜக்கனி முஸ்லிம்களிடமிருந்து எடுத்துக் கொண்டது. சபா நிருத்தியம், குறிஞ்சி நிருத்தியம் இரண்டும் கொந்தலியைப் போல் வேடுவ மக்களிடமிருந்து எடுத்தழைத்தவை.

மேலே விளக்கியதிலிருநது இந்த உபரூபகங்கள் மக்கள் தொடர்பு, ராகலயச் சிறப்புக்கள், ஆட்ட விந்நியாசம் முதலிய சிறப்புக்களை கொண்டன என்பது புலனாகும்.

நாடக அரங்கம் :

பண்டை இந்தியாவில் நாடகங்கள் முதலில் விழாக் காலங்களில் கோயில்களிலும் அரண்மனைகளிலும் நடிக்கப்பட்டன. பின், மற்ற இடங்களிலும் நாடக