பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

143


மண்டபம் அமைத்து நடிப்பது வழக்கமாயிற்று. சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் பரத முனி, நாட்டிய சாஸ்திரம் என்ற தமது நூலில் நாடக மண்டபம், நடிப்பின் முறை இவைகளைத் தெளிவாக உரைத்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே நாடகக்கலை நாடெங்கும் பரவி இருந்ததென்று எண்ணலாம். இந்த நூல் நமக்கு முக்கியமான ஆதாரம். பிற்காலத்தில் அபிநவகுப்தரால் எழுதப்பட்ட அபிநவ பாரதி என்ற நாட்டிய சாஸ்திரத்தின் உரை மிகவும் பயனுடையது. இன்னும் பல நூல்களிலும், இதில் கண்ட பொருள்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

நாடக அரங்கம் மூன்று வகைப்பட்டதாயிருந்தது. அவைகளுக்கு விகிருதம், சதுரசிம், திரியசிரம் என்று பெயர், விகிருதம் என்பது செவ்வகம், சதுரசிரம் என்பது சதுரம். திரியசிரம் என்பது முக்கோணம், நாடக மண்டபத்தின் வடிவைப் பொறுத்தது இந்தப் பிரிவினை. இவை ஒவ்வொன்றும் சேஷ்டம்,மத்தியமம், அவரம் என்று மூவகைப்படும். மண்டபத்தின் அகலத்தைப் பொறுத்தது இந்தப் பிரிவினை. சேஷ்டம் 54 முழமும், மத்தியமம் 32, முழமும், அவரம் 16 முழமும் நீளமுள்ளவை.இவற்றில் நடிகர்கள் பேச்சு நன்றாய்க் கேட்டபதற்கும், அவர்களுடைய முகபாவங்கள் தெளிவாய்த் தெரிவதற்கும் மத்திய மேவாட்டமானதென்று பரத முனி கூறியுள்ளார்.

நாடக அரங்கத்தின் அமைப்பைத் தெரிய, விகிருத மத்தியமம் என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இது 32 முழம் அகலமும், 64 முழம் நீளமும் உள்ளது. இதை இரண்டு சமபாகப் பிரித்தால் முன்பாகம் நாடகம் பார்க்கும் மக்கள் இருக்கும் இடம், இதற்கு பிரேட்சா கிருகம் என்று பெயர், இதில் இருக்கைகள், கல் மரம் இவைகளால் அமைக்கப்பட்டு, வரிசைக்குமேல் வரிசையாகப் படிக்கட்டு வடிவு வாய்ந்தது. அரங்கத்தின் பின்பாகம் சமமாகப் பிரிக்கப்படும்; அதன் பின் பாதிக்கு