144
செந்தமிழ் பெட்டகம்
நேபத்திய கிருகமெனப் பெயர். இதுதான் நடிகர்கள் வேடம் புனைந்து கொள்ளும் இடம். இது 32 முழம் அகலமும், 16 முழம் நீளமும் உள்ளது. முன்பாதி இரண்டு சம அங்கணங்களாகப் பிரிக்கப்படும். பின் அங்கணம் ரங்கசிரஸ் என்பது. இது 32 முழம் அகலமும், 8 முழம் நீளமும் உள்ளது, நேபத்திய கிருகத்திலிருந்து, இந்த அங்கணத்துக்கு வருவதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன, இரண்டு வாயில்களுக்கும் நடுவிலுள்ள சுவரில் மான், மயில் போன்ற அழகான விலங்குகளும், பறவைகளின் பதுமைகளும் மரத்தால் செய்யப்பட்டுப் பதிக்கப் பட்டிருக்கும். இச்சுவரின் முன் ஆடவர் ஒருவர் பெண்கள் பலராகவுள்ள இசைக்குழுவினர் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் முதலிய இசைக் கருவிகளுடன் உட்கார்ந்திருப்பார்கள், நடிகர்கள் அவர்கட்கு இரண்டு பக்கத்திலும் உட்கார்ந்திருப்பார்கள், முன் அங்கணம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும், நடுவிலுள்ளது ரங்க பீடம். இது 16 முழம்அகலமும் 8 முழம் நீளமும் உள்ளது. இது தான் நடிகர்கள் நடிக்குமிடம். இது ரங்கசிரஸிற்கு 1 1/2 முழம் தாழ்ந்திருக்கும். இதற்கும் ரங்க சிரஸிற்கும் நடுவில் திரை தொங்கும். ரங்க பீடத்திற்கு இரு பக்கத்திலும் 8 முழ நீளமுள்ள மேடைகள் உள்ளன. அவைகளுக்கு மத்தவாரணி என்று பெயர். மத்தவாரணிகளுக்கும் ரங்க சிரஸிற்கும் நடுவில் சுவர் இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் சுவரின் மறைவில் தான் நடிகர்கள் ரங்க சிரஸில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தச் சுவரும் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மத்தவாரணிகள் 8 முழம் அகலமும், 8 முழம் நீளமும் உள்ளவை. ரங்க பீடம் பிரேட்சா கிருகத்திற்கு 1 1/2 முழம் உயர்வாகக் கட்டப்பட்டிருக்கும்.
இது விகுருதி மத்தியம நாடக மண்டபத்தின் அமைப்பு. மற்ற வகையான நாடக மண்டபங்களிலும் நீளம் அகலம் மாறுபட்டாலும், உட்பாகங்கள், பிரேட்சா கிருகம், ரங்க பீடம், மத்தவாரணி, ரங்க சிரஸ், நேபத்திய கிருகம் எல்லாம் இம்மாதிரியே அமைந்திருக்கும்.