கவிதைக்குரிய
இலக்கணங்கள்
எல்லா நாடுகளிலும் விஞ்ஞானத்துக்கும் உரை நடைக்கும் நீண்ட காலம் முன்னதாகவே கவிதை தோன்றியுள்ளது. கவிதையானது இயற்கை, வாழ்க்கை இரண்டையும் கற்பனை மூலம் மறுபடைப்புச் செய்வதால், கவிஞன் படைப்பவன் என்று கருதப்படுகிறான்.
கவிதையை விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டுப் பார்தத்தால் அதன் கற்பனைத் தன்மை புலனாகிறது. அதை உரைநடையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் இலக்கியத் தன்மை தெளிவு படுகிறது.
ஒவியம், சிற்பம், இசை, காவியம், நாடகம் முதலிய எந்த அழகுக் கலையிலும் கவிதை என்ற கற்பனை கலந்திருப்பதைக் காணலாம். பிரபஞ்சத்தைக் கால இடப்பெருக்கமாகக் கண்டு, சிவன் என்ற கடவுளையும், திருமால் என்ற கடவுளையும், பல்வேறு மனநிலைகளை உருவகப்படுத்தி, விநாயகன், முருகன், அனுமன் என்ற கடவுளரையும் உண்டாக்கியோ, தரிசித்தோ மக்களுக்குத் தந்த ஞானிகள்-செய்யுள் புனைந்தாலும், புனையா விட்டாலும்-கவிகளேயாவர். பண்டைக் கால எகிப்தியரும், கிரேக்கரும், வட ஐரோப்பியரும் தெய்வங்களை இவ்வாறு கற்பித்துக் கொண்டு, அவற்றையொட்டிப் புராணக் கதைகளும் நாடகங்களும் இயற்றினர். இலக்கியத்தில் உள்ள கவிதை ஒருபுறமிருக்க, மக்களி