பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

149


கவிதையனுபவத்தை நன்கு வருணித்துள்ளார். நிலவினிலே தென்றலை நுகர்ந்தும், நைட்டிங்கேல் பறவையின் இசையை மாந்தியும் பரவசமாகம்வோது வாழ்க்கைக் கடலிற் பிரிந்து தனித்தனித் தீவுகளதாக நிற்கும் மக்கள், “நாம் அனைவரும் ஒரே கண்டத்தின் மக்களே’ என்று ஒரு கணமேனும் உணர்வதாக அவர் கூறுகிறார்.

“நீ வேறு நான் வேறு” என்று பாகுபாடு அற்றாலொழியக் கவிதையுண்மையை உணர இயலாது. பிறர் அனுபவத்தைக் கண்டு கவி பரிவுடன் கற்பனை செய்கிறான்.” ஒரு மரத்தில் இரு பறவைகள் தங்குகின்றன; ஒரு பறவை கனியை சுவைக்க, மற்றொன்று பார்ப்பதோடு அமைகிறது. “ வாழ்க்கையில் நேரடியாய் ஈடுபடுவது விவகார நிலை’. இந்த நிலையில் உண்மையைக் காண்பதில் ஈடுபடுவது ஆன்மிக நிலை அல்லது கவிதை நிலை என்று கூறலாம் விஞ்ஞானம், வரலாறு, நீதிமன்ற விசாரண முதலியவைகள் வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் செய்திகளாகத் தருவதோடு நின்று விடுகின்றன. ஆனால் கவிதை அந்நிகழ்ச்சிகளைப் பரிவுடன் கற்பனை மூலம் உணரும் அனுபவத்தை நமதாக்குகிறது. வர்ட்ஸ்வர்த்தின் ‘முன்னிசை' என்ற சுயசரிதைக் காவியத்திலே அவர் தம் இளமையிலே நடந்தவற்றை வேறொருவருக்கு நடந்தவை போல் விருப்பு வெறுப்புற்று வருணிப்பது குறிப்பிடத்தக்கது. கீட்ஸ் என்னும் கவிஞர் கவிதையின் சிற்பியல்பை ‘எதிர்மறைத் திறன்' என்று குறிக்கிறார். அதாவது, தன் கொள்கையை மறுத்துப் பிறர் தன்மையை ஏற்கும் சக்தி என்னலாம். ஒருவன் அறை குறைச் செய்தியறிவுடன் திருப்தியடைந்து,அதற்கு மேல் காரண காரியங்களைத் தேடியலையாது இருத்தலே இந்தத் திறன் ஆகும்.ஒருவன் மீது குற்றம் சாட்டினால் அவன் தாய் அது உண்மையா, பொய்யா என்று விசாரியாமல், அவன் குற்றவாளி யானாலும் வீண் பழிக்குள்ளானவன். ஆனாலும் அவனுடைய நிலையைக் கண்டு பரிதவிப்பாள். ஒரு