உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

155


பாட்டுக்கும் சொல்லின் வைப்பு முறையில் ஒரு தொடர்பு பின்னிச் செல்லும் வகையில் பாடப்படும் நூல் சொற்றொடர் நிலைச் செய்யுள்.

இனி, வைதருப்பம், கொளடம் என இருவகையான செய்யுள் நெறியுண்டு. அவற்றுள் வைதருப்பம் பத்து வகைப்படும் அவை 1. செறிவு : சொல்லும் பொருளும் இறுகி நெருங்கித் தழுவி நிற்பது. 2. தெளிவு : கவி கருதிய பொருள் வெளிப்டையகாகத் துலங்குவது. 3. சமநிலை : வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று வகை ஒடிலகளும் கலந்து சமமாக நிற்பது. 4. இன்பம் : சொல்லும் பொருளும் கேட்போருக்கு இன்பம் தருகிற முறையில் அமைந்திருத்தல். 5. ஒழுகிசை : செவிக்கு இனியதாய்ச் செல்வது. 6. உதாரம் : சொல்லாலன்றிக் குறிப்பால் பொருள் உணர்வது. 7. உய்த்தலில் பொருண்மை : சொற்களை வருவித்துப் பொருள் கொள்ளாமல், உள்ள சொல்லைக் கொண்டே பொருளமைத்தல், 8. காந்தம் : உலகியல் கடவாமல் உயர்த்திக் கூறுதல், 9. சமாதி : எடுத்துக் கொண்ட பொருளின் தன்மையை ஒப்புமைப் பொருள் மேல் அமைத்துக் கூறுதல்.

கெளடம் என்பது இங்குக் கூறிய நெறிக்கு மாறுபட்டது.

பாடல்களுக்குள்ள அலங்காரங்களைத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அணி என்ற பெயரால் அழைத்தனர். சொல் அலங்காரத்தோடு அமைவதைச் சொல்லணி என்பர். பொருளழகைப் பொருளணி என்பர். பொருளணிகளைத் தண்டியலங்கார ஆசிரியர் முப்த்தைந்தாகப் பிரித்து, அவற்றிற்குப் பல விகற்பங்களைக் கூறுகிறார்; சொல் அணிகளை, மடக்கும் மற்றுமுள்ள மிறைக் கவிகளும் என்று பலபடியாகக் கூறுகிறார்.

தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலின் பொருளதிகாரத்தில் செய்யுளியல் செய்யுளுக்கு