156
செந்தமிழ் பெட்டகம்
இலக்கணம் கூறுகிறது. அதற்குப் பின், யாப்பெருங்காலம், யாப்பருங்கலக் காரிகை என்பவையும் செய்யுளிலக்கணம் கூறியவை. கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த இலக்கண வரம்புகளுக்கெல்லாம் இலக்கயமாகி அருமையன வடிவம் பெற்ற உயர்ந்த கவிதைகள் பல தோன்றியிருந்தன என்பதும், அக்காலத்திலேயே இத்தனை விதிகளுடன் மொழிக்க வரம்பு வகுக்கும் 'தொல்காப்பியம்' போன்ற இலக்கண நூல்களும் ஏற்பட்டு விட்டன என்பதும் தமிழின் சிறப்பியல்புகள்.
ஒரு கவிதைக்கு அதன் அமைப்பே முக்கியம் என்பது நல்லிசைப் புலவர் கண்ட துணிபு. அமைப்பு முக்கியம் என்றால் பொருள் வேண்டியதில்லை என்பதன்று. கவிதைக்கு இனிமை தருவது அதன் கருத்து மட்டுமேயென்பதில்லை. அதன் உணர்ச்சியும் ஆகும். எப்படி ஒரு மலரானது செடியிலிருந்து நுட்பமாக எழிலோடு மலர்கிறதோ, அப்படியே பொருளும் வடிவமும் ஒரே சமயத்தில் ஒரு சேரக் கவிஞனுடைய இதயத்திலிருந்து கவிதையாக மலர்வன, கவிதைக்க உரிய உறுப்புக்கள் எல்லாம் மலரின் இதழ்களும் மற்ற அங்கங்களும் போலாம். இத்தனைக்கும் ஆதாரமாக, மலரின் தோற்றத்துக்கே மூல காரணமாக உள்ள தத்துவம் ஒன்று உள்ளேயிருந்து தொழிற்படுகிறது. இதுவே கவிஞனது இதய தத்துவம் ஆகும். இந்த உயிர்த்தத்துவம் தொழிற் படாமல் ஆக்கப்டுகிற செய்யுட்கள் எல்லாம், வடிவம் சரியாக இருந்தாலும், வெறும் காகிதப்பூக்கள்தாம்.
தமிழில் செய்யுள் இலக்கணத்தை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா என ஏழு பிரிவில் ஆக்கியனர் பாவினால் உணரும் பொருளுக்குத் தனியாக ஓர் இலக்கணம் வகுத்த சிறப்பு தமிழுக்கே உரியது. பா என்பது வெண்பா, அகற்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்று ஐவகைப்படும். மருட்பா தவிர்த்த மற்ற ஒவ்வொன்றிற்கும் தாழிசை, துறை, விருத்தம் என மூன்று