பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் கம்பன்


வளர்த்த தமிழ்



   மிழ்க் கவிதையுலகத்தில் தன்னிகர அற்றவர் கம்பர் 'தமிழ் மொழியின் கதியாவார் கம்பரும் திருவள்ளுவரும்' என்று வியந்தோறினார் பேராசிரியர் செல்வக்கேசவராயர் ‘கல்வியிற் பெரியவன் கம்பன்' என்னும் பழமொழி தமிழ் நாட்டில் நெடுங்காலமாக வழங்கிவருகின்றது. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் - கம்பன் பிறந்த தமிழ் நாடு' என்று கம்பன் தமிழ் நாட்டை மனமாரப் போற்றினார் பாரதியார். தமிழ் மொழியை வாழ்வித்த முப்பெருங் கவிஞருள் கம்பரும் ஒருவர்.

இத்தகைய சிறந்த கவிஞவிரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி 'கன்னன் பிறப்பும் பினாளில் துலங்கிற்று, கம்பன் பிறப்பு இன்னம் தெரிந்தார்கள் இலையில்லை' என்றார் முருகதாசர் காவிரி நாடு என்று கூறப்படும் சோழநாட்டில் மாயூரத்திற்கு அருகேயுள்ள திருவழுந்துாரிலே உவச்சர் குலத்தில் கம்பர் தோன்றினார் என்பர்

தென் தமிழ் நாட்டில் உள்ள உவச்சர் குலத்தார் இன்றும் கம்பர் என்ற சொல்லைத் தம் இயற்பெயரோடு இணைத்து வழங்கி வருகின்றனர்

கம்பர் என்ற பெயர் இக்கவிஞருக்கு அமைந்ததைக் குறித்துப் பலர் பலவாறு கூறுவர்

சோழநாட்டு வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்த பெருமகன்