பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை உலகில்


சமஸ்கிருதம்



விதை கவியின் செயலாகம். கடிவ என்ற சொல் இரண்டு மூன்று வகையாக விளக்கப்படுகிறது. கூ என்ற வினைச் சொல்லிற்கு ஒலி உண்டாக்குவது, உணர்ச்சியோடு கூவுவது என்று பொருள். இதிலிருந்து கவி என்ற சொல் வருகிறது கரு என்ற வினைச் சொல்லிலிருந்து கவி என்ற சொல் பெறப்படுகிறது; கவ்ரு என்பதற்க நிறம் தீட்டுவது, வருணிப்பது, புகழ்வது என்றெல்லாம் பொருளுண்டு. கவி என்ற சொல் வேதம் முதற்கொண்டு கையாளப்டும் சொல். அழகாகவோ, வியக்கத் தக்க முறையிலோ ஒன்றை ஆக்கும் ஆற்றலை உடையவனைக் கவி என்று அழைத்தனர். உலகைப் படைத்த கடவுளும் கவி, மயன் முதலிய சிற்பிகளும் கவிகள். உணர்ச்சியுடன் கூவுவதோ, வருணிப்பதோ, வியக்கும்படி ஆக்குவதோ, சீரிய எண்ணத்தின் விளைவாதலால் கலை என்றால் கிராந்த தரிசி, அதாவது மறைந்திருப்பதும் தொடர்பற்றதுமாய்த் தோன்றும் பொருள்களையும் ஊடுருவி நோக்கி உணரும் ஆற்றல் பெற்றவன், பரந்த நோக்குடையவன் என்று விளக்குகிறார்கள். ஆகையால் கலை அல்லது கவிதை என்பது, சீரிய எண்ணம் ஒன்றை அழகுபடச் சொல்லமைப்பொன்றில் தோன்ற வைப்பதாகும்.

சொல்லுக்கும் பொருளுக்கும் பிரிக்க முடியாமல் இருக்கும் நெருங்கிய தொடர்பை மேற்சொன்ன 'கூ’ என்ற சொல்லும், அதனடன் தொடர்பு கொண்ட ‘ஆகூதி