பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

செந்தமிழ் பெட்டகம்


என்ற சொல்லும் விளக்கும். கூ என்பது சப்தத்தைக் குறிக்கிறது; அச்சொல்லிலிருந்து எபந்த ஆகூதி என்ற சொல் சிறந்த கருத்து என்ற பொருளைக் குறிக்கிறது.

பட்டதோதர் என்ற அணியாசிரியர் மேற் சொன்னதற்கு ஒரு திருத்தத்தைத் தருகிறார்; ஆசிரிய எண்ணம் என்பது ரிஷிக்கே உரியது. ரிஷி அல்லாதவன் கலையாக ஆக முடியாதானாலும், சீரிய எண்ணம் மட்டும் எழுந்தாலும், அதை அழகிய முறையில் சொல்லவராதாவன் ரிஷியாக மட்டுமிருப்பானேயல்லது, கலையாக ஆக முடியாது. எடுத்துக்காட்டு : வால்மீகி நீண்ட காலமாக ரிஷியாயிருந்த போதிலும் சொல்லருள் ஏற்பட்ட பிறகே கவியானார்.

சீரிய எண்ணம் அல்லது ரிஷித்துவம் என்பது எக்கலைக்கும் எவ்வித ஆக்கத்திற்கும் அடிப்படை. ஆனால் அவ்வெண்ணம் சொல் வாயிலாக ஓர் அழகிய உருவங் கொள்ளும் போது கவிதை ஆகிறது. கவிதையில் சொல் முக்கியமா பொருள் முக்கியமா என்ற ஆராய்ச்சிக்கும் இதில விடை கிடைக்கிறது. முதல் அணியாசிரியர்களிற் சிறந்தவரான பாமஹர் சொல்லும் பொருளும் சேர்ந்ததே கவிதை என்றார். பிற்காலத்தில் வந்த ஜகந்நாத பண்டிதர் பொருளைப் புறக்கணிக்காமலே, சொல்லை இன்றியமையாத இலக்கணமாகக் கொண்டது கவியின் கலை என்று விளக்கினார்.

கவிஞனுடைய அறிவு திடீரென்றும், பளிச்சென்றும், ஆயாசமின்றியும் உண்மைகளையும் அழகுகளையும் காண்பதால் அதற்குப் பிரதிபை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். பிரதிபையை மேதை, கற்பனை என்று சொல்லலாம்; இதில் ஏனையோருக்கத் தோன்றாத தொடர்புகளும், உண்மைகளும், அழகுகளும், நுண்பொருள்களும் கவிஞனுக்குத் தோன்றுவதால் பிரதிபை என்ற ஆற்றலில்லாதவர் மட்டமான கவியாவர்; பிரதிபை இருந்தால் அதை உருப்படுத்திக் கொள்ள உதவுவனவே படிப்பும் பயிற்சியும். படிப்பையும்