பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

செந்தமிழ் பெட்டகம்


கவிதையின் இலக்கணம் கூறுங்கால் பாமஹர் சொல்லும் பொருளும் சேர்ந்தது (சஹிதெள) காவியம் என்றார். இதைப் பின் தொடர்ந்து கந்தகர் என்ற அணியாசிரியர் இரண்டின் சேர்க்கை என்ற கருத்தை அடிட்பபடையாகக் கொண்டு, 'சேர்க்கை' (சாகித்தியம்) என்ற தின்பொருளை விரித்துக் கூறுகிறார். குந்தகரும் போஜமஹாராஜாவும் சாகித்தியம் என்பதன் பொருளை விளக்கியுள்ளனர். “இலக்கண சுத்தமாய், வாக்கிய அமைப்புக்கு மாறுபாடின்றிப் பொதுவில் யுக்திக்கும் பகையின்றிச் சொல்லும் பொருளும் சேர்ந்து நடைமுதல் பேச்சிலும் நூல்களிலும் வழங்கி வருகின்ற அச்சொற் பொருட் சேர்க்கையைக் காட்டிலும் கவிதையில் காணப்படும் சேர்க்கை, சாகித்தியம் என்று சிறப்பித்துக் கூறும் வகையில் எவ்விதம் சிறந்தது?

கவிதையில் ஏற்படும் சொற்பொருட் சேர்க்கை, சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள பொருத்தம், ஒன்றையொன்று ஆதரித்துச் சமஅளவில் இரண்டும் இருக்கும் அழகு அதாவது பொருளுக்குப் போதிய சொல்லில்லாமல் ஏற்படும் குறைபாடோ, பொருளுக்கு மேல் மிகுதியாய் வீணாக விழுந்திருக்கும் சொற் குவியலால் ஏற்படும் குறைபாடோ, பொருளுக்கு மேல் மிகுதியாய் வீணாக விழுந்திருக்கும் சொற்குவியலால் ஏற்படும் குறைபாடோ இல்லாமல் சீர்தூக்கியது போல் இரண்டும் ஒன்று சேர்ந்து தாம் சுவை தேறுவோருக்கு அளிக்க வேண்டிய சுவையைப் பயக்க ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டது போல் இருக்கும் தன்மையே கவிதையில் நிகழும் சொற்பொருட் சேர்க்கை எனும் சாகித்தியம்” என்றார் குந்தகர். “ கவியம் பிழைகள் இல்லாமலிருப்பது, நடையழகிற்குக் காரணமாகக் காப்பியக் குணங்கள் இருப்பது அணிகளைச் சேர்ப்பது, சுவையிலிருநது ஓரிடமும் விலிகியிராமல் ஏற்கும் சுவையின் தொடர்பு இருந்து கொண்டே இருப்பது சாகித்தியம் என்ற சேர்க்கை”.