பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

163


இவ்வளவு அம்சங்களையும் சேர்த்துக் கூறுவது கவிதையை வருணிப்பதாகும்; கவிதைக்கு இலக்கணம் கூறுவதாகாது. அதுவுமல்லாமல் கவிதையில் ஒவ்வோரிடத்தில் ஒவ்வோர் அமிசம் சிறப்புற்றிருக்கும்; சில செய்யுட்களில் அணிகளே இல்லாமலிருக்கும்; அழகிய சுவைக்கினிய செய்யுளொன்றில் இலக்கணப் பிழை ஒன்று ஒரு மூலையில் இருந்து விடலாம். அப்படியே முதலில் சொன்னபடி, கவிதையின் இலக்கணத்தைப் பொருளைக் கொண்டு கூறாமல், சொல்லைக் கொண்டே கூற வேண்டும். நடையின் குணங்களோ, அணிகளோ, உணர்ச்சிகளோ, எது எங்கே அழகோ, அவ்வழகே நாம் கவிதையில் காணும் பயனாகும். இவ்வழகு என்பது லெளகிகமான விஷயங்களில் நமக்கு ஏற்படும் இன்பத்தினின்றும் வேறுபட்டான பேரின் பத்திதன் தன்மையைப் பெற்றதோர் சுவை; அதைப் பயக்கவல்ல சொல்லமைப்பே கவிதை என்று ஜகன்னாத பண்டிதர் விளக்கினார். .

ஆகவே கவிதை என்பது மற்றப் பேச்சுக்களிலிருந்தும் மாறாகப் புலப்படுவதன் காரணம் தனக்கென்று ஏற்பட்ட கவிமுறையே என்று தெளிவாகும். இந்தக் கவிமுறை எப்படிக் கைகூடுகிறது? இதில் அடங்கிய அமிசங்கள் எவை? இவ்வாராய்ச்சியில் முதலில், பாமஹர், தண்டி என்ற அணியாசிரியர்கள் கவிதையானது கவிதையாகச் சிறப்புற்றுத் தோன்றுவது அணிகளாலே என்றனர்.

இவர்களுடைய கொள்கைப்படி கவிதையிலுள்ள எல்லாச் சிறப்பமிசங்களும் அலங்காரத்திற்குட்பட்டனவே. அலங்காரம் என்றால் அழகு படுத்துவதே என்பதே இவர்கள் கூறும் பொருள். தண்டியைப் பின் பற்றிய வாமனர் என்ற அணியாசிரியர், “கவிதையாகச் சிறப்புற்றுத் தோன்றுவது அணிகளாலே என்றனர். இவர்களுடைய கொள்கைப்படி கவிதையிலுள்ள எல்லாச் சிறப்பமிசங்களும் அலங்காரத்திற்குட்பட்ட