பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

செந்தமிழ் பெட்டகம்


வாக்கியம் என்று கவிதையின் இலக்கணங் கூறினார். நடுவே மேற்சொன்ன அபிநவகுப்தரின் சீடரான க்ஷேமேந்திரர் என்ற ஆசிரியர் ஆனந்தவர்த்தனர் சொன்னதையே எடுத்துக் கொண்டு, நல்ல கவிதை என்றால் அதன் அமிசங்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமுள்ளனவாயிருக்க வேண்டும். எல்லா அமிசங்களும் விளக்கப்பட வேண்டிய ரசத்திற்குப் பொருத்தமுள்ளனவாயிருக்க வேண்டும்” என்று, 'பொருத்தம்' (ஒளசித்தியம்) என்ற கொள்கை ஒன்றை விரித்துரைத்தார்.

மேற்கூறிய இலக்கணங்கள் அமைந்த கவிதை செய்யுள் நடையிலும் இருக்கலாம், உரைநடையிலும் இருக்கலாம். செய்யுள் நடைக் கவிதைக்கு உதாரணம் காளிதாசனது இரகுவமிசம்; உரைநடைக் கவிதைக்கு உதாரணம் பாணனது காதம்பரி. இருநடையும கலந்த நடைகொண்டு கவிதையும் உண்டு. அது சம்பு எனப்படும். உதாரணம் : போஜர் செய்த இராமாயண சம்பு செய்யுள் நடையில் பல ருக்கங்கள் கொண்டது மகாகாவியம்; சிறிய அளவில் அமைக்கப்பட்டது கண்டகாவியம் (த.க) இரகுவமிசம் மகாகாவியம்; மேகதூதம் கண்ட காவியம்.

தனித்தனியே உள்ள அழகிய செய்யுட்களுக்கு முத்தகங்கள் என்று பெயர். இரண்டு மூன்று முதல் பல தொடர்கள் சேர்ந்தவை யுகமகம், கலாபகம், குளகம் எனப்படும். ஒரே பொருள் பற்றிச் செய்யும் நூறு செய்யுட்கள் கொண்டதற்க ‘சதகம்’ என்று பெயர்; அமருகரின் சிருங்கார சதகம், பர்த்ருஹரியின் நீதிசதகம் முதலியவை உதாரணங்கள். கவி செய்த நூல் படித்து மட்டும் சுவைக்கப்பட்டால் அது சிரவிய காவியம் எனப்படும். நடித்தும் சுவைக்கப்பட்டால் அது திருசிய காவியம் (பாக்கக் கூடிய காவியம்) ஆகும்; சாகுந்தலம் முதலிய நாடகங்கள் திருசிய காவியங்கள்.

வால்முகியும் வியாசரும எழுதிய இராமாணய மகா பாரதங்களும் காவியங்களே. ஆனால் அவற்றின் கதா