பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை பிறந்த


கதை



கதைகள் :

கதைகள் முதன்முதலில் எப்பொழுது தோன்றின என்று கூறுவது கடினம். ஆதி மனிதன் காட்டில் வேட்டையாடச் சென்று திரும்பியவுடன் தன் அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொன்னதிலேயே கதையின் தொடக்கத்தைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவார்கள். உலகம் முழுவதும் கதைகள் பரவியிருப்பதையும், அவற்றை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதையும் நாம் காண்கிறோம்.

கதைகளில் பலவகையுண்டு. விலங்குக் கதை, தேவதைக் கதை, நாடோடிக் கதை, புராணக் கதை, காப்பியக் கதை, வரலாற்றுக் கதை, நீதிக் கதை என்றிவ்வாறு பலவாறாக அவற்றைப் பிரிக்கலாம்.

பழங்கதைகளுக்கும் இக்காலத்தில் வளர்ந்துள்ள நாவல், சிறுகதை ஆகியவற்றிற்கும் வேறுபாடுண்டு. பழங்கதைகளிலிருந்து வளர்ச்சியடைந்தே இவை தோன்றின என்று கூறலாம். ஆனால் இன்று இவற்றின் இலக்கணங்கள் மிகவும் வேறுபட்டிருக்கின்றன (சிறு கதை, நாவல் ஆகியவற்றிற்குத் தனிக்கட்டுரைகள் உண்டு)

மானிடவியல் :

கதைகள் என்பன பண்டை மக்கள் உலகத்தை ப்பற்றியும் மனிதனைப்பற்றியும் பிற உயிர்களைப்