பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

செந்தமிழ் பெட்டகம்


இயற்கைக்கும் அரிய ஆற்றல்கள் உள்ளன என்று எண்ணினான். இயற்கை இடையூறுகளைப் பற்றி அவனுக்கு விளங்கவில்லை. அவைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் அச்சத்தைத் தவிர்க்கவும் பழங்கதைகளைப் படைத்தான்; சடங்குகளைக் கைக் கொண்டான். இவைகளே ஆதிகாலச் சமயத்தைக் காட்டும் கண்ணாடிகள், சமயத்தைப் பற்றிய பேச்சு இறைவழிபாடாகவும் பழங்கதைகளாகவும், சமயச் செயல்கள் சடங்குகளாகவும் விழாக்களாகவும் உருப் பெற்றன. ஆகவே பழங்கதைகளும் சடங்குகளும் மிகப் பழமையானவையே.

பழங்கதைகள் பெரும்பாலும் பொருள்களின் தோற்றத்தைக் குறித்துப் புனையப்படுகின்றன. இவை மந்திரத்திற்கும் மதத்திற்கும் துணையானவை. இவைகளை மக்கள் புனிதமானவையாகவும் கருதுகின்றனர் இக்கதைகள் ஒரு காலத்தில் நிகழ்ந்த உண்மைகளையே உரைக்கின்றன என்று நம்பி வருகின்றனர். இக்கதை புகழ் பெற்றவர்கள் என்று எண்ணப்படு கின்றனர். பழங்கதைகளையொட்டிய சடங்குகள் யாவும் அக்கதைகள் கூறும் நிகழ்ச்சிகளை உருவகப்படுத்தும் நாடகங்களாகும். கதைத் தலைவர்களும் முன்னோர்களும் தத்தம் வாழ்க்கையில் புரிந்த செயல்களெல்லாம் சடங்குகளாகச் செய்யப்படுகின்றன. அவர்களோடு தொடர்புள்ள இடங்கள் புண்ணிய பூமியாகப் போற்றப்படுகின்றன. இக்கதைகளாலும் சடங்குகளாலும் மக்கள் தங்கள் அச்சத்தைத் தவிர்க்கின்றனர்; நலம் விளையும் என்றும், இவற்றால் தீங்குகள் எற்படாவென்றும் நம்புகின்றனர்; இன ஒற்றுமையோடு வாழ்கின்றனர்; இனவொழுக்கத்தைப் பேணுகின்றனர்; பழிபாவத்திற்கு அஞ்சி வாழ்கின்றனர்.

இக்கதைகள் இனத்தின் வழிகாட்டிகளாக உள்ளன. சடங்குகளும் விழாக்களும் பக்தியோடு செவ்வனே