பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

171


செய்யப்பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றன; மக்களின் நம்பிக்கையை வளர்க்கின்றன.

மானிடவியலாளர்கள் எல்லாக் கதைகளுக்கும் பொதுவான விளக்கம் கூற முற்படவில்லை; பல்வேறு இனத்தவரின் கதைகளுக்கும் தனித்தனி விளக்கங்கள் காண்கின்றனர். மொழியியலாளர், தத்துவ ஞானிகள், உளவியலாளர்,அறிஞர் போன்ற பலரும் பலவிதமான விளக்கங்கள் தருகின்றனர். கதைகள் இயற்கை மாறுதல்களையும் உற்பாதங்களையும் உருவகங்களால் விளக்குவதற்காக ஏற்பட்டவை என்று சொல்லுகின்றனர். எடுத்துக்காட்டாக; கிரேக்க கதையில் அப்பாலோ, டாப்னியைப் பின்தொடர்வதானது அதிகாலையைத் தொடர்ந்து சூரியன் கிளம்புவதைக் காட்டுகிறது.பிராய்டு (த.க) என் பழங்கதை ஆசை நிறைவுக்குரிய கருவியாகும் என்கின்றார். யுங் பழங்கதை மனித குலத்தின் நனவிலி மனக் கனவுகளைக் காட்டுவதாகும் எனக் கூறுகிறார். பழங்கதையானது இயற்கையின் வளம், பிறப்பு, இறப்புப் போன்றவைகளைப் பற்றியது என்று மானிடவியலாசிரியர் சர் ஜேம்ஸ் பிரேசர் கூறுகிறார்.

பழங்கதைகள் நாடுகளின் இலக்கியங்களை வளப்படுத்தியுள்ளன; நாடோடி இலக்கியம்,கதை, கலை,சமயம், இசை, சடங்கு முதலியவைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இவை வாழ்க்கைக்கு அழகு அளித்துள்ளன; பண்டை மக்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், இயற்கையில் நம்பிக்கை யுள்ளவர்களாகவும் இருந்தமைக்குக் காரணமாக இருந்துள்ளனன; விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தூண்டுகோலாக இருந்து வந்துள்ளன.

தமிழ்நாட்டுக் கதைகள் :

தமிழ்நாட்டிலே வாய்மொழியாகக் கூறும் கதைகள் பல இருக்கின்றன. அவை பெரும்பாலும் அச்சிடப் பெறவில்லை. இவையல்லாமல் அம்மானை என்ற எளிய