பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

செந்தமிழ் பெட்டகம்


செய்யுள் வடிவத்தில் பல கதைகள் இருக்கின்றன. பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, கள்ளழகர் அம்மானை, ஏணியேற்றம், ஆரவல்லி சூரவல்லி கதை என்பவை அவற்றுள் சில. தேசிங்கு ராஜன் கதை, ராமப்பையன் அம்மானை முதலியவை வரலாற்று அடிப்படையில் எழுந்த வீரச்சுவை மிகுந்த கதைகளாகும் விக்கிரமாதித்தன் கதை,அரபிக் கதை, ஈசாப்புக் கதை போன்றவை மொழிபெயர்ப்புக் கதைகள். பஞ்ச தந்திரம், இதோப தேசம் முதலிய நீதிக்கதைகளும் தமிழிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் உயர்ந்த நீதிகளைப் போதிக்கும் புராணக் கதைகளும், கடவுளுடைய திருவிளையாடல்களைக் குறித்த கதைகளும் செய்யுளிலும் உரைநடையிலும் இருக்கின்றன. தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பல சுவை மிக்க கதைகளும் உண்டு

பிற நாட்டு கதைகள் :

உலகின் பல்வேறு நாடுகளிலும் சுவை மிகுந்த கதைகள் உண்டு. கிரேக்க, ரோமானியப் புராணக் கதைகளும், காப்பியக் கதைகளும் உலகப் புகழ் பெற்றவை. இவற்றைப் போலவே சாசர் என்ற ஆங்கிலேயர் எழுதிய கான்ட பரிக் கதைகள், டானியல் டீபோ இயற்றிய ராபின்சன் குரூசோ, ஸ்விப்ட் எழுதிய கலிவரது பிரயாணங்கள், டெனிசன் இயற்றிய அரசர் கதைகள் ஜெர்மானியரான கிரிம் சகோதரர்கள் எழுதிய தேவதைக் கதைகள், அரபு மொழியில் முதலில் வெளியான அரபிக் கதைகள் முதலியன எல்லோரும் விரும்பிப் படிக்கவும் கேட்கவும் தக்க நல்ல கதைகளாகும், பழங்காலத்திலிருந்தே சீனாவிலும் சிறந்த கதைகள் தோன்றியுள்ளன. அவற்றைப் பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துள்ளனர்.

சமஸ்கிருத நீதிக்கதைகள் :

சமஸ்கிருத இலக்கியத்தில் நீதிக் கதைகள் எப்பொழுது உருவாயின என்ற கேள்விக்குப் பதில்