பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

செந்தமிழ் பெட்டகம்


காதாச்லோக சங்கிரகம் என்ற மூன்றும், மற்றும் சிறுஅளவில் அமைந்தவையான வேதாள பஞ்ச விம்சதி, கதா குசுமமஞ்சரி முதலியனவும் இரண்டாவது வகுப்பைச் சேர்ந்தவை.

பஞ்சதந்திரம் உலகப் புகழ் பெற்றது. சிறந்த நீதிகளைப் போதிப்பது.

இதோபதேசம் நாராயண பண்டிதர் இயற்றியது, அநேகமாகப் பஞ்ச தந்திரத்தை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள 43 கதைகளில் 25 கதைகள் பஞ்ச தந்திரத்தில் உள்ளவை. இந்நூல் மித்திர பேத, சுகிருது லாப, சமர, சந்தி என நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இது பஞ்ச தந்திரத்தைவிடச் சுலோகங்கள் அதிகமாக உடையது. இச்சுலோகங்கள் மிக அழகாக அமைந்துள்ளன.

பிருஹத் கதை : இதை எழுதியவர் குணாட்டியர் என்பவர். இந்நூல் ஒரு பெரிய கதைக் களஞ்சியம் என்று கூறலாம். இதிலிருந்து பிற்காலத்தில் கவிகள் தம் காப்பியங்களுக்கும் நாடகங்களுக்கும் வேண்டிய மூலக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இக்காரணத்தால் இது இலக்கியத் துறையில் இராமாயண மகா பாரதங்களுக்கு ஒப்பான சிறப்பைப் பெற்றிருக்கிறது. இதில் உதயணன் கதையுடன் அவன் மைந்தன் நரவாகன தத்தனுடைய காதற்கதைகள் கணக்கற்ற உபகதை களுடன் தரப்பட்டிருக்கின்றன. இக்கவிஞர் இந்நூலைப் பைசாசம் என்ற பிராகிருத மொழியில் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. தமிழிலுள்ள கொங்கு வேளிரின் பெருங்கதைக்கும் முதல் நூல் இதுவேயாகும். இதன் கவி குணாட்டியர் தrவிண பாரதத்தில் பிரதிஷ்டானபுரத்தில கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்ததாக ஆராய்ச்சியாளர் மதிப்பிடுகின்றனர்.

கதாசரித் சாகரம் :

மேலே சொன்ன பைசாக மொழியில் முதலில் அமைந்த பிருகத் கதையைப் பின்னால் சமஸ்கிருதத்தில்