பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

175


அமைந்தனர். இந்த சமஸ்கிருத அமைப்புகளில் நமக்கிப்பொழுது இருப்பவற்றில் முதன்மை பெற்றது சோமதேவரின் கதாசரித சாகரம், இது மகாபாரத்தில் காலளவு கொண்டது. இதில் 22,000 சுலோகங்கள் உள்ளன. காச்மீரத்தைச் சேர்ந்த சோமதேவன் (கி.பி 1070) என்பவர் இதன் ஆசிரியர்.

பிருகத் கதா மஞ்சரி :

ஷேமேந்திரன் என்ற மற்றொரு காச்மீரக்கவி ஷேமேந்திரன் பைசாச மொழியிலுள்ள பிருகத் கதையைப் பிருகத் கதாமஞ்சரி என்ற பெயருடன் சமஸ்கிருத மொழியில் மேலும் சுருக்கமாய் எழுதியிருக்கிறார். இவர் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இவ்விரண்டிற்கும் முன்னால் புதஸ்வாமி என்பவரால் எழுதப்பட்ட பிருகத் கதா சுலோக சங்கிரகம் என்ற நூல் முழுதும் அகப்படவில்லை.

திவ்யாவதானம் :

பெளத்தக் கதைகள் பலவற்றை இதிற் காணலாம். நேபாள நாட்டிலிருந்து கிடைத்த இந்த நூலின் உரை நடை இயற்கை அழகு பொருந்தியதாக இருக்கிறது. புத்த அவதாரக் கதைகளையெல்லாம் மேற் சொன்ன ஷேமேந்திர கவி 'பெளத்தாவதார கல்பலதா' என்ற கதை நூலில் தொகுத்தார்.

வேதாள பஞ்ச விம்சதி :

சிவதாசர் 1478-ல் இதை எழுதினார். ஜம்பலகத்தர் பெயரிலும் இந் நூலின் பாடாந்தரம் ஒன்று காணப்படுகிறது. 25 கற்பனைக் கதைகள் இதில் உள்ளன. தமிழிலுள்ள விக்கிரமாதித்தன் கதையில் இப்பகுதி காணப்படுகிறது. இதில் காணப்படும் நுட்பமான வினாக்களும் விடைகளும் படிப்போர் உள்ளத்தைக் கவரும் தன்மையன. -