பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

செந்தமிழ் பெட்டகம்



குறிஞ்சி யாக்கி, மருதத்தை முல்லையாக்கி, நெய்தலை மருதமாக்கியது’ என்றும், கோதாவரியாறு 'ஐந்திணை நெறியளா வீச்' சென்றது என்றும் கூறுகின்றார்.

தண்டமிழ் வழங்கும் பாண்டி நாட்டுக்கு எந்த நாடும் இணையாகாது என்பது கம்பர் கருத்து. கல்வி கேள்விகளிற் சிறந்த சங்கப் புலவர்கள் பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த பசுந் தமிழைச் ‘நெஞ்சொல்' என்று அவர் சிறப்பிக்கின்றார். வடமொழியாளரையும் தென் மொழியாளரையும் முறையே “மறை வாணர், செஞ்சொல் அறிவாளர்' என்ற (நாகபாசம்-263) அவர் கருத்து இனிது விளங்கும். 'செஞ்சொற் கவியின்பம்' (மிதிலை-23) என்று தமிழ்க் கவிதையின் இன்பத்தைச் சிந்தை மகிழ்ப் போற்றுகின்றார்.

சங்காலத்துப் பெருங்காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அகவற்பாவில் அமைந்துள்ளன. பத்தாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கொள்ளப் படுகின்ற சிந்தாமணி என்னும் பெருங்காப்பியத்தில் விருத்தம் என்னும் பாவினம் முதன்முதலில் எடுத்தாளப்பட்டது.

சிந்தாமணிக்குப் பின்னே எழுந்த காவியங்களும் புராணங்களும் பெரும்பாலும் விருத்தப்பாவிலே இயற்றப்பட்டுள்ளன. நல்லியல் கவிஞராகிய கம்பர் விருத்தமென்னும் பாவினத்தை ஆளும் திறமையில் நிகரற்றவர் என்பது தமிழ்ப் புலலர் கருத்து, 'விருத்தமெனும் ஒண்பாவில் உயர் கம்பன்' என்னும் புகழுரை இதற்கு சான்றாகும். கம்பர் காவியத்தில் உள்ள சந்த விருத்தங்கள் சிறந்த ஓசை நயம் உடையனவாகும். இவ்வுண்மையைச் சில உதாரணங்களால் அறிந்து கொள்ளலாம்.

பஞ்சவடிச்சாலையில் இராமனது அழகிய திருமேனியைக் கண்டு ஆசையுற்று வந்த சூர்ப்பணகையின் கோலத்தை மெல்லோசையுடைய செஞ்சொற்