பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

செந்தமிழ் பெட்டகம்


ஆதிகாலம் முதல் நாட்டில் வழங்கும் காவியங்களிலிருந்து சில ரசமான சம்பங்களைப் பொருளாகக் கொண்டு கதைப்பாட்டுக்கள் அமைக்கப் பெறலாம். இலக்கியம் கற்றறியாத மக்களுக்கு நாட்டு இலக்கியத்தின் மேன்மையை எடுத்துரைக்கும் வகையில் இவை இயற்றப் பெறலாம். வரலாற்றுச் சம்பங்களைப் பாடும் கதைப் பாட்டுக்கள் உள்ளன. மக்களது கருத்தைக் கவரும் தற்காலச் செய்திகளை அவர்களிடையே பரப்பும் சாதனமாகவும் கதைப்பாட்டுக்கள் விளங்குகின்றன. ஆனால் இவை அனைத்தையும் வடத் தீரச் சயல்களைப் பாடும் கதைப் பாட்டுக்களே எல்லா நாடுகளிலும் மலிந்திருக்கும்.

ஆங்கிலக் கதைப்பாட்டுக்களில் சிறந்தவை 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன. இவற்றுள் பெரும்பான்மையானவை இங்கிலாந்து ஸ்காட்லாந்து எல்லையில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களையும், செல்வரிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவிய ராபின் ஹ9ட் என்ற வீரரது வாழ்க்கைச் சம்பவங் களையும் அடிப்டையாகக் கொண்டவை.

கதைப் பாட்டுக்களின் இசையமைப்புப் பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும், நடனத்திற்கேற்ற சந்தமுடையதாகவும் இருக்கும். பிரான்ஸ், கிரீஸ் முதலிய சில ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் கதைப்பாட்டுக்களின் மெட்டு முக்கியமாகக் கோஷ்டி நடனத்திற்கு ஏற்றதாகவே இருக்கும். பால்கன் தீவுகளில் கதைப்பாட்டின் மெட்டு ஒரே மாதிரியாக மாறுதலின்றி இருக்கும். இந்திய நாட்டுக் கதைப்பாட்டு மெட்டுக்களும் இத்தகையவை. பாட்டின் தாளம் கதையின் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சவுக்கமாகவோ, துரிதமாகவோ அமைக்கப்படும். கதைப்பாட்டின் அமைப்பை அடிப்டையாகக் கொண்டு கவி பாடிய ஆங்கிலக் கவிஞர்கள் உண்டு. வர்ட்ஸ்வொர்த் பாடிய 'லிரிக் கதைப்பாட்டுக்கள்' என்ற கவிதைகள் புகழ் வாய்ந்தவை. கதைப்பாட்டு வடிவான