புலவர் த. கோவேந்தன்
179
கதைகளை லாங்பெல்லோ, ரொசெட்டி, ஸ்வின்பர்ன், ஹெளஸ்மன் போன்ற பல ஆங்கில கவிஞர்கள் பாடியுள்ளனர்.
இந்தியாவில் எல்லா இராச்சியங்களிலும் கதைப் பாட்டுக்கள் அதிகமாக வழங்குகின்றன. தேசிங்கு ராஜன் கதை அல்லியசாணிமாலை, ராமப்பையன் அம்மானை போன்ற் நீண்ட கதைப் பாட்டுக்கள் தமிழ் நாட்டில் பல உண்டு.
சிறுகதை :
பொருளொடு புணராப் மொழியானும்லும், பொருளொடு புணர்ந்த நகை மொழியானும் என்று உரைவகை நடையே நான்கு என மொழிப’ (தொல்-பொருள்-செய்யுளியல்-171) என்பது தொல்காப்பியச் சூத்திரம். ஆகவே மிகப் பழைய காலத்து உண்டான கதைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவை தொல்காப்பியனார் காலத்தேயே இருந்தன என்று நினைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அறிவதல்லாமல் அக்காலக் கதை என்று கூறத்தக்கது ஒன்றும் இன்று கிடைத்தில.
முதன் முதலாகத் தமிழ் மொழியில் நாம் காணும் கதைகள் வீரமாமுனிவர் (1680-1747) எழுதிய பரமார்த்த குரு கதைகளாகும். 19 ஆம் நூற்றாண்டில் தாண்டவராய முதலியார் இயற்றிய வினோதரச மஞ்சரி என்னும் நூலில் பல கதைகள் உள்ளன. இவைகள் யாவும் கதைகள் என்றே கூறப்படினும் இன்று நாம் காணும் சிறுகதைகளைப் போல இரா. ஆனால் இன்றைய சிறு கதைகள் வளர இவை துணையாயின எனலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல செய்தித்தாள்களும், வார இதழ்களும் தோன்றலாயின. அரசியலறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் செய்தித் தாள்கள் தோன்றினவாயினும், பொழுது போக்கக்காகச் சிறுகதைகளையும் தாங்கி வெளிவந்தன. வாரத்தாள்கள்